அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் செய்திக் குறிப்பு: தமிழகத்துக்கு அகதிகளாக வந்து, இங்குள்ள முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களின் நலனில், முதல்வர் ஜெயலலிதா மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். எனவே தான், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படுமென, கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது.
இதைச் செயல்படுத்தும் வகையில், சமூக நலத் துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை, முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால், முகாம்களில் வசிக்கும், 5,544 இலங்கைத் தமிழர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாகப் பெறுவர். இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.



0 Responses to ஈழத் தமிழ் அகதிகளுக்கும் ஓய்வூதியம்: முதல்வர் உத்தரவு