அன்புக்கும் மதிப்பிற்குமுரிய சுவிஸ்வாழ் தமிழ் பேசும் மக்களே!!!
எம் தாயகத்தில் சிறீலங்கா பேரினவாத அரசாங்கம் அரங்கேற்றிய இனப்படுகொலையின் கொலைக்களங்கள் உலகத்தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு பெரும் அதிர்வலைகளையும், உலகளாவிய ரீதியில் சிறீலங்காவிற்கு இராஐதந்திர அழுத்தங்களையும் கொடுத்துவருகின்றது.
இதைத் தொடர்ந்து 03.08.2011 புதன்கிழமை இரவு 20:55 மணிக்கு சுவிஸ் நாட்டின் முதன்மை தொலைக்காட்சியான SF 1 உம் முள்ளிவாய்க்காளின் கொலைக்களங்களின் காட்சித்தொகுப்பொன்றும், போர்க்குற்றவாளி ஐகத் டயாஸ் பற்றிய காட்கிகளும் ஒளிபரப்பவுள்ளது.
இச் செய்தியை உங்களுக்கு தெரிந்த பல்லின மக்களுக்கும் தெரியப்படுத்தி எம் உறவுகளுக்கு நேர்ந்த அவலங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர உதவுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இணையத்தளம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
சுவிஸ் ஈழத்தமிழரவை
kuruzug@gmail.com
சுவிஸ் நாட்டின் SF 1 தொலைக்காட்சியில் சிறீலங்காவின் போர்க்குற்றக் காட்சிகள் இன்று ஒளிபரப்பப்படவுள்ளது
பதிந்தவர்:
தம்பியன்
03 August 2011



0 Responses to சுவிஸ் நாட்டின் SF 1 தொலைக்காட்சியில் சிறீலங்காவின் போர்க்குற்றக் காட்சிகள் இன்று ஒளிபரப்பப்படவுள்ளது