Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் கொலைக்களங்கள் எனும் தலைப்பிலான சர்ச்சைக்குரிய ஆவணப் படத்தை தயாரித்த பிரிட்டனின் சனல் - 4 அலைவரிசை, அந்த ஆவணப்படத்தின் தொடர்ச்சியாக மற்றொரு ஆவணப்படத்தையும் தயாரிக்க ஆரம்பித்துள்ளது. இலங்கையின் கொலைக்களங்கள்: "தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்" என இந்த ஆவணப்படுத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் துஷ்பிரயோகங்கள் குறித்து இரண்டாவது விசாரணையொன்றை நடத்தும் நிகழ்ச்சியை தயாரிக்குமாறு பிரிட்டனின் ஐ.ரி.என். புரடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் சனல் 4 அலைவரிசையின் செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பிரிவின் தலைவர் டொரத்தி பெய்ர்ன் கூறியுள்ளார்.

இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தின் சில காட்சிகளை சனல் 4 அலைவரிசை வரலாற்றில் ஒளிபரப்பப்பட்ட மிக அதிர்ச்சிகரமான காட்சிகளாகும். அவற்றில் பெரும்பாலான காட்சிகள் செல்லிடத் தொலைபேசியினால் படம்பிடிக்கப்பட்டிருந்தன. வன்முறைகள் மிகுந்த இக்காட்சிகள் தொடர்பாக பிரிட்டனின் ஊடக ஒழுங்குபடுத்தல் அமைப்பான ஒவ்கொம் விசாரணையொன்றை நடத்தியது. எனினும் இறுதியில் அக்காட்சிகளை ஒளிபரப்ப அனுமதி வழங்கப்பட்டது.

பிரிட்டனில் அந்த ஆவணப்படத்தை பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர். 30 இற்குமேற்பட்ட நாடுகிளல் இந்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது ஆவணப்படமானது போர்க்குற்றங்களுக்கான சக்திவாய்ந்த புதிய ஆதரங்களைக் கொண்டிருக்கும் என எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது ஆவணப்படத்தைப் போலவே இதிலும் ஜோன் ஸ்னோ விளக்கங்களை வழங்கவுள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போதியளவு சர்வதேச நடவடிக்கை மேற்கொள்ளப்படாமை குறித்தும் இந்த ஆவணப்படத்தில் கேள்வி எழுப்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் வாழ் சமூகத்தினரிடமும் மற்றும் முள்ளிவாய்க்கலில் இறுதிவரை நின்ற சிலரிடமும் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதோடு புதிய ஆதாரக் காணொளிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளதாக அறிகிறது.


அதிர்வு

0 Responses to இலங்கையின் கொலைக்களங்கள் பாகம் 2 - தயாரிப்பில் சனல் 4 தொலைக்காட்சி (காணொளி)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com