ஸ்பெக்ட்ரம் வழக்கில், திகார் சிறையில் இருக்கிறார் கனிமொழி. இந்நிலையில், கனிமொழி விரைவில் விடுதலை அடைய வேண்டி எம்.பி., வசந்தி ஸ்டான்லி சிறப்பு பூஜை செய்தார்.
தி.மு.க. ஒருங்கிணைப்பு செயலாளரும், எம்.பி.,யுமான டி.கே.எஸ்.இளங்கோவன், இது குறித்து, பத்திரிகையாளர் களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர், ‘’வசந்தி ஸ்டான்லி, கட்சித்தலைமைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை.
வசந்தி ஸ்டான்லி மேற்கொண்ட சிறப்பு பூஜை, அவரது தனிப்பட்ட விருப்பம். இதற்கு கட்சி ஒருபோதும் பொறுப்பேற்காது’’ என்று கூறினார்.



0 Responses to கனிமொழி விடுதலை பெற திமுக எம்.பி. பூஜை