அயர்லாந்து தலைநகர் டப்ளின் (Dublin) இல் எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த அனைத்துப் போராளிகளையும், மற்றும் இலங்கை அரசினால் இதுவரை காலமும் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் நினைவுகூறும் தேசிய நினைவெழுச்சி நாள் இடம்பெற்றது.
முதலில் பொதுச்சுடரினை மாவீரன் கதிர்ச்செல்வன் அவர்களின் சகோதரன் திரு.ரஜனி ஏற்றிவைத்தார். தொடர்ந்து எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்காகவும் , மற்றும் அனைத்துப் பொது மக்களுக்காகவும் தேசிய நினைவெழுச்சி நாளில் கலந்து கொண்ட அனைவரும் கைகளில் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தியதுடன் மலர் வணக்கத்தையும் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அனைத்துப் போராளிகளுக்காகவும் பொது மக்களுக்காகவும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அயர்லாந்து வாழ் மக்களுக்காகதாயகத்தில் இருந்து எழிழன் அவர்கள் தொலைபேசி ஊடாக உரை நிகழ்த்தினார் அவர் தனது உரையில் எமது தாயக விடிவிற்காக வித்தான மாவீரர்களையும் மற்றும் படுகொலை செய்யப்பட பொது மக்களையும் அவர்கள் செய்த தியாகங்களையும் எடுத்துக் கூறியதுடன் தற்பொழுது இலங்கை அரசானது மாவீரர்களின் கல்லறைகளைஇடித்து அந்த மாவீரர் நினைவாலயங்களை அழிப்பதை மிகக் கவலையுடன் எடுத்து கூறியதுடன் எமது மக்கள் இன்று தங்கள் வீடுகளிலும்மனங்களிலும் மாவீரரை நினைவு கூருகின்றார்கள் எனவும் புலம்பெயர்ந்து வாழ் தமிழ் மக்கள்அனைவரும் ஒற்றுமையாகவும் உணர்வு பூர்வமாகவும் இந் நாளை அனுஷ்டிக்க வேண்டும் எனவும்கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து உணர்வுமிக்க மாவீரர் கவிதை மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் இருந்துகவிஞ்ஞர் அறிவுமதி அவர்கள்தொலைபேசிஊடாக உரை நிகழ்த்தியதுடன் தனது கவிதை ஒன்றினையும் வாசித்தார். தொடர்ந்து கலாநிதி லால்அவர்கள் உரை நிகழ்த்தினார்.அவர்,எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களையும் அவர்கள் செய்த தியாகங்களையும் அத்துடன் இதுவரை காலமும் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் பற்றி எடுத்துக்கூறியதுடன், இன்று வெளியிடப்பட்ட ஈழத்தமிழர்தேசியக் கேள்விக்கு உலகளாவிய நீதி கேட்கும் பிரகடனம் பற்றியும் விளக்கிக் கூறினார்.
தொடர்ந்து உணர்வுமிக்க புதிய மாவீரர் கானங்கள் அரங்கத்தில் ஒலிக்கவிடப்பட்டது இம்மாவீரர்கானங்கள்ஆனது 2009ம் ஆண்டு கலை பண்பாட்டுக்கழகத்தினரால் உருவாக்கப்பட்டது. இறுதியாக நன்றி உரையினை செல்வி. வதனி அவர்கள் நிகழ்த்தினார்கள். இந்த தேசிய நினைவெழுச்சி நாள் ஒன்று கூடலில் பலதரப்பட்ட வயதினரும் மற்றும் பல்லின சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.
அயர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள் 2011 உண்ர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது
பதிந்தவர்:
Anonymous
28 November 2011



0 Responses to அயர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள் 2011 உண்ர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது