பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் உள்ள பகர்சே (BAGERSEE) மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லத்தில், உறுதிமொழி எடுக்கப்பட்டதைத்தொடர்ந்து ஈiகைச்சுடரினை 2ம்லெப். மகாலிங்கம் அவர்களின் சகோதரி திருமதி. குணசீலி சகாதேவன் அவர்கள் ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாவீரர் உரித்துடையோர் அனைவரும் சுடர் ஏற்றினர். துயிலும் இல்லப் பாடல் ஒலிக்க அனைத்து இதயங்களும் மாவீரரை மனமுருகி வணங்கி நின்றனர்.
தொடரந்து மலர்வணக்கம் இடம் பெற்றது.
மாவீரர் வணக்க நிகழ்வினைத் தொடர்ந்து எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனை படித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாய்த்தமிழக உறவுகளின் உரைகள் காணொளி வடிவில் ஒளிபரப்பப்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசின் ஜனநாயக அணி.பிரான்ஸ் நாட்டின் வடபிராந்தியத்திற்கான உறுப்பினர் திரு.சரவணமுத்து சசிகுமார் அவர்களின் சிறப்புரையைத் தொடர்ந்து,மாவீர்ர் வணக்கப்பாடல்களுக்கான நடனங்கள், கவிதைகள், பாடல்களும் இடம்பெற்றன.
தொடர்ந்து மாவீர்ர்பேச்சுப் போட்டியில்கலந்து கொண்டு வெற்றியீட்டிய சிறுவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடனும், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற எழுச்சி முழக்கத்துடனும் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில்சிறப்பாக நடைபெற்றமாவீரர் நாள் 2011 (படங்கள் இணைப்பு)
பதிந்தவர்:
Anonymous
28 November 2011



0 Responses to பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில்சிறப்பாக நடைபெற்றமாவீரர் நாள் 2011 (படங்கள் இணைப்பு)