ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான மாநாட்டில் இலங்கையின் சார்பில் பங்கேற்கும் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அடிப்படை குற்றவியல் சட்டஅறிவுகளை கொண்டிருக்கவில்லை என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் சித்திரவதைகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடந்த 9 ஆம் திகதி அவருக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
இன்போது மொஹான் பீரிஸினால் சரியான புள்ளிவிபரங்களையும் சம்பவங்களையும் கூறமுடியவில்லை. 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் உரிய சட்டமுறைகள் இருப்பதாக குறிப்பிட்டார்.
எனினும் அதனை கண்டித்துள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு நடைமுறை நிறைவேற்று அதிகாரம் கொண்டு ஜனாதிபதி முறையின் கீழ் அந்த சட்டங்கள் வலுவிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணைத்தளத்தில் சில சட்டத்தரணிகளை துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை காப்பாளர்கள் தாக்கப்பட்டமை குறித்து மொஹான் பீரிஸ் பதில் எதனையும் வழங்க மறுத்துவிட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் சில சட்டத்தரணிகள் துரோகிகள் என்ற குறிப்பிடப்பட்டமை எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஊடகவியலாளார் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் இலங்கைக்கு எதிரான பிரசாரத்துக்காக வெளிநாடு ஒன்றில் அகதியாக சென்றிருக்கலாம் என்று மொஹான் பீரிஸ் பதிலளித்துள்ளார். அவரால் வலுவான ஆதாரங்களை சமா்ப்பிக்க முடியவில்லை.
சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனம் கட்டாயம் காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரகடனம் சர்வதேச யுத்த நீதிமன்றம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பீரிஸ் பதிலளிக்கவில்லை.
வெலியமுன என்பவரது வீட்டின் மீது கிரனைட் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து கேட்டபோது மொஹான் பீரிஸ் அளித்த பதில்களில் அவருக்கு அடிப்படை சட்டஅறிவு இல்லை என்பதை உணர்த்தியதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை சித்திரவதைகள் தொடர்ல் பூஜ்ஜிய நிலை ஏற்படவேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுவதாக அவா் குறிப்பிட்டபோது அதனை சித்திரவதைகள் தொடா்ன ஐக்கிய நாட்டு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரின் பதில்கள் உண்மையை மறைப்பதாக அமைந்துள்ளதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை பிரதிநிதிக்கு அடிப்படை குற்றவியல் சட்டஅறிவு இல்லை!- ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு
பதிந்தவர்:
தம்பியன்
11 November 2011



0 Responses to இலங்கை பிரதிநிதிக்கு அடிப்படை குற்றவியல் சட்டஅறிவு இல்லை!- ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு