முல்லைத்தீவுக் கடற்கரைப்பகுதியில் நேற்றிரவு (26) ஒன்பது மணியளவில் திடீரெனக் கடல்பெருக்கெடுத்து ஊர்மனைகளுக்குள் புகுந்து கொண்டதால் மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி இடம் பெயர்ந்து வருகின்றனர்.
அலம்பில், உடுப்புக்குளம், சிலாவத்தை, கள்ளப்பாடு, செம்மலை, முல்லைத்தீவு நகரம் என்பன் இந்தக் கடற்பெருக்கால் பாதிப்புற்றுள்ளன.திபு திபுவென நேற்று மாலை கரையை நோக்கி வந்த கடலைப் பார்த்து மக்கள் அச்சம் கொண்டனர். அதுவும் ஆழிப்பேரலை ஏற்பட்டு ஏழாம் ஆண்டு நிறைவுநாளில் இவ்வாறு கடல் பெருக்கெடுத்ததால் மீண்டும் சுனாமி ஏற்பட்டு விட்டதாகப் பயந்து கையில் அகப்பட பொருள்களுடன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து சென்றனர்.
இதனால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு உட்புகுந்த கடல்நீர் நீர் வற்றாமல் முழங்கால் அளவுக்கு இன்னமும் இருப்பதாகவும் கரையில் இருந்து சுமார் 250 மீற்றர் வரை உள்வந்து- நிற்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுணாமி போல பெரிய அலையாகத் திரண்டு வரமால் கடல் நீர் மட்டம் திடீரென உயர்வடைந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் இவ்வாறு வந்தது மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.
இது குறித்து மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
முல்லைத்தீவுக் கடல் 250 மீட்டார் வரை உட்புகுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
27 December 2011
0 Responses to முல்லைத்தீவுக் கடல் 250 மீட்டார் வரை உட்புகுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது!