Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுனாமிப் பேரலையின் தாக்கத்தால் கடந்த 2004 ஆம் ஆண்டு தாயகம் உட்பட தமிழகம் மற்றும் ஆசிய நாடுகளில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான மக்களை நினைவு கூர்ந்து லண்டனில் நேற்று நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.

வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Northolt Village Community Centre மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்வில் பல பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மாலை 7:00 மணி முதல் மாலை 8:30 மணி வரை நடைபெறவுள்ள இந் நிகழ்வில் தீபமும், மெழுகுவர்த்தியும் ஏற்றி வைக்கப்பட்டு மக்களின் மலர் வணக்கத்தோடும், நினைவு உரைகளோடும் நிகழ்வுகள் நிறைவுபெற்றது.



சிறிய அளவில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வை அமைப்புக்கள் சாராது தேசியம் சார்ந்த செயற்பாடுகளில் முன்னின்று உழைக்கும் பல தொண்டர்கள் இணைந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்து பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் எவையும் நிகழ்வு ஏற்பாடு செய்யாமை வேதனை அளிப்பதாக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.





0 Responses to சுனாமி பேரலையால் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து லண்டனில் நடைபெற்ற வணக்க நிகழ்வு (படங்கள், காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com