ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 28ம் தேதி கிளாட் வின் என்பவருக்குச் சொ ந்தமான படகில் எமர்சன், பிரசாந்த், வின்சென்ட், அகஸ்டின், போல்டேத் ஆகிய 5 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற னர். கச்சத்தீவு அருகே அவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.
போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட தாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இலங்கை சிறையில் அடைத்தனர்.
அவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தங்கச்சிமடத்தில் டிசம்பர் 8ம் தேதி தமிழக மீனவர் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு உறுதி அளித்ததன் பேரில் டிசம்பர் 10ம் தேதியிலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
மீண்டும் 16ம் தேதி ராமேஸ்வரத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மீ¢னவர்களை விடுவிக்காவிட் டால் தொடர் போராட் டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் சிறையிலுள்ள 5 மீனவர்களையும் யாழ்ப்பானம் மாவட்டம் மல்லாங்கம் கோர்ட்டில் நேற்று ஆஜர் படுத்தினர்.
இலங்கையில் உள்ள இந் திய தூதரக உயர் அதிகாரி மகாலிங்கம் உத்தரவுப்படி மீனவர்கள் சார்பாக யாழ்ப்பான மாவட்ட வக்கீல் ரெமடி ஆஜரானார். வழ க்கை விசாரித்த நீதிபதி கஜநீதிபாலன், ஜனவரி 2ம் தேதி வரை அவர்களு க்கு காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடு த்து 5 மீனவர்களும் மீ¢ண் டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த தகவல் இன்று காலை ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து ராமேஸ்வரம் தபால் நிலையம் முன்பு மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மீனவர் கூட்டமைப்பு தலைவர் போஸ் தலைமை வகித்தார். தங்கச்சிமடம் டி.சூசையப்பர்பட்டினம் பங்கு தந்தை சேசு, மீனவர் சங்க தலைவர்கள் சேசு ராஜ், தேவதாஸ், மகத்துவம், எமரேட் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர். டிஎஸ்பி மணிவண்ணன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என நிரபராதி மீனவர் விடுதலை கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் தெரிவித்தார்.
யாழ்ப்பானம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் காவல் நீடிப்பு
பதிந்தவர்:
தம்பியன்
20 December 2011
0 Responses to யாழ்ப்பானம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் காவல் நீடிப்பு