வருகிற புத்தாண்டில் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா புத்தாண்டு தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்த்துச் செய்தியில், புதுப்பொலிவுடன் புத்தாண்டு புலர்கின்ற இந்த இனிய நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்ற உன்னத, உயர்ந்த இலட்சியத்தை அடைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உங்கள் சகோதரியின் தலைமையிலான தமிழக அரசு முனைப்புடன் செயற்படுத்தி வரும்.
தமிழகத்தில் சீர்மிகு திட்டங்கள் ஏற்றம் பெறவும், ஏழ்மை நிலை அகன்றிடவும் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத்திட்டங்களின் பயன்களை உரியவர் அனைவரும் பெற்றிட வேண்டும் என்பதே இந்த இனிய புத்தாண்டில் எனது பேராவல் ஆகும்.
நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! அயராது உழைப்போம்! எந்த நிலையிலும், எந்த வகையிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தரமாட்டோம் என்ற உறுதி கொண்ட உள்ளத்துடன் பொற்காலத் தமிழகத்தை புதிதாய் மீண்டும் படைப்போம்.
இந்த இனிய புத்தாண்டில் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளங்களும், நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கி கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Her wishes are true and genuine. My humble request: Kindly convert your Koda Nadu estate bungalow, and Siruthavur bungalow into high specialty hospitals.