தமிழீழ விடுதலைப்புலிகளை குற்றம் சுமத்திக்கொண்டிருப்பதால் மாத்திரம் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது என்று நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் வேண்டுமானால், போரின் போது ஏற்பட்ட பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.
அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க வேண்டும். அத்துடன் அரசியல் பேதங்களை களைய வேண்டும். இவற்றை மேற்கொள்ளாத போது இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்தை, சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என்று நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் பலர் அவையவங்களை இழந்துள்ளனர். ஆனால், இலங்கை அரசாங்கம் போரினால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை என்று முன்னர் கூறிவந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், தற்போது போரின் போது பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டன என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு, பொதுமக்களின் பாதிப்புக்கள் குறித்த தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆயிரக்கணக்கானோர் தமது சாட்சியங்களை பதிவுசெய்திருந்தனர்.
தமது உறவுகள் கொல்லப்பட்டமை, காணாமல் போனமை, கடத்தப்பட்டமை, சரணடைந்தமை உட்பட்ட முறைப்பாடுகள் அதில் அடங்கியிருந்தன.
இறுதிப் போரின் போது அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலங்களுக்கு பொது மக்களுடன் தமிழீழ விடுதலைப்புலிகளும் சென்றனர். இதனையடுத்து கனரக ஆயுதங்களினால் இலங்கையின் படையினர் குறித்த பாதுகாப்பு வலயங்களின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டனர். இதற்கு சாட்சிகள் இருக்கின்ற போதும் அவை வெளிப்படுத்தமுடியாத சாட்சிகளாக உள்ளன.
போரின் போது, தாம் பாரிய கஸ்டங்களை அனுபவித்ததாக மருத்துவர் ஒருவரை கோடிட்டு நியூர்யோர்க் டைம்ஸ் மேற்படி கருத்து வெளியிட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை குற்றம் சுமத்துவதால் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது: நியூயோர்க் டைம்ஸ்
பதிந்தவர்:
தம்பியன்
31 December 2011
0 Responses to விடுதலைப்புலிகளை குற்றம் சுமத்துவதால் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது: நியூயோர்க் டைம்ஸ்