வட கொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தவர் கிம் ஜாங். சுப்ரீம் லீடர் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர்.
பிரதமர் என்ற பதவி இருந்தாலும், சர்வ அதிகாரத்தையும் தன்னிடமே வைத்துக் கொண்டவர். இவர் கடந்த சனிக்கிழமை(17.12.2011) மாரடைப்பால் காலமானார்.
இந்த தகவலை நேற்று(19.12.2011) தான் அதிகாரப்பூர்வமாக அரசு தொலைக்காட்சி அறிவித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் மரணம் குறித்த அறிவிப்பு வெளியான நேற்றே குறைந்த தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன.
இதுகுறித்து இராணுவ அதிகாரிகள் எந்த தகவலும் வெளியிடவில்லை. எனினும் வடக்கு கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக யான்ஹாப் தொலைக்காட்சி தெரிவித்தது.
கிம் ஜாங் மரணத்தை அடுத்து அவரது மகன் கிம் ஜாங் யுன் தலைவர் பொறுப்பேற்கிறார். அவருக்கு மக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
0 Responses to பிரதமர் மரண அறிவிப்பு நாளில் வட கொரியா ஏவுகணை சோதணை