Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்தியில் அடுத்து அமையவிருக்கும் ஆட்சி தென்னக நதிகளை இணைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தா.பாண்டியன் கூறியுள்ளார்.

சென்னையில் கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தா.பாண்டியன், இந்தியாவில் தென் மாநிலங்களில் ஏற்பட்டு வரும் தண்ணீர் பிரச்சனையைப் போக்க, நதிகளை இணைப்பது ஒன்றுதான் சரிவான தீர்வாக இருக்க முடியும் என்றும், இதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்து இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் மத்தியில் அடுத்து அமையவுள்ள ஆட்சி தென் மாநில நதிகளை இணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும், இதற்கான நிதி ஆதாரத்துக்கு  ஒரு ஊழலின் நிதியை ஒதுக்கினாலே போதுமானது என்றும் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடாது என்றும் சூசகமாக கூறியுள்ளார்.

0 Responses to மத்தியில் அடுத்து அமையவிருக்கும் ஆட்சி தென்னக நதிகளை இணைக்க வேண்டும்!:தா.பாண்டியன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com