சுதந்திர தமிழீழம் எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆனால் இந்தியாதான் தனது நிலைப்பாடடில் இருந்து மாறவேண்டும் என பேராசிரியர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொணடு உரையாற்றும் போதே இக்கருத்தினை அவர் முன்வைத்துள்ளார்.
இலங்கையை மையப்படுத்திய, சீன - இந்திய வலுத்தளத்தில் இன்றைய சூழலில் தமிழர்களுக்கு இந்தியா தேவை என்பதற்கு மேலாக இந்தியாவுக்கு தமிழர்கள் தேவை என்ற நிலை ஏற்படுகின்றது. கலாசார, பண்பாட்டு ரீதியான உறவினைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு எதிராக தமிழர்கள் இல்லை என்பதனை இந்தியா புரிந்து கொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தனை பெருந்துயரங்களுக்குப் பிறகும் தமிழர்களுடைய நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. மாற்றங்கொள்ள வேண்டியது இந்தியாவின் நிலைப்பாட்டில்தான் என பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள் தனதுரையில் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான தமிழகச்சூழல் ஈழத்தமிழர்களுக்கான குரல் முன்பைவிட ஓங்கி ஒலிக்கின்றது என்பதனை குறிப்பிட்ட பேராசிரியர், தமிழக் மக்களைப் பொறுத்தவரை ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு பங்களிக்க வேண்டும் என்ற கடமையுணர்வு ஒங்கியுள்ளதோடு அவர்களின் நெஞ்சங்களின் 'தமிழீழம் தேவை' என்பது உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழீழம் மாற்றம் இல்லை! இந்தியா தான் மாற வேண்டும்!! (காணொளி இணைப்பு)
பதிந்தவர்:
தம்பியன்
30 December 2011
0 Responses to தமிழீழம் மாற்றம் இல்லை! இந்தியா தான் மாற வேண்டும்!! (காணொளி இணைப்பு)