எண்ணிலடங்கா வீரவரலாறுகளைத் தன்னகத்தே அடக்கி, ஈடிணையற்ற உயிர்த்தியாகங்களுடன் வெற்றியின் விளிம்பைத் தொடவிருந்த சமயத்தில், குள்ளநரிகளின் கள்ள உறவுடன், ஸ்ரீலங்காவானது ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஒரு பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. பெற்ற தாயின் கற்பு, கண் முன்னாலேயே சூறையாடப்பட்டுக்கொண்டிருக்க, "அவளின் தாலியைக் கொள்ளையடிப்பதிலேயே" ஒருசில ஈனப்பிறவிகள் இன்னமும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்த ஈனப்பிறவிகளில் ஒன்றாக, மிக அண்மையில் முளைவிட்ட "கிருஷ்"!
நீ பேசிய வீர வசனங்களையெல்லாம் கேட்டேன்.இந்த வீரத்தை இவ்வளவு காலமும் எங்கேயப்பா ஒளித்து வைத்திருந்தாய்? பக்கத்தில் மனைவியிருந்தால், இல்லாத வீரமெல்லாம் யாருக்கும் வந்துவிடுமோ? இவ்வளவு வாய்ச்சொல் வீரம் காட்டும் நீ, ஈழத்தில் இத்தனை படுகொலைகள் அரங்கேறியபோது என்ன செய்துகொண்டிருந்தாய் ? சொக்கட்டான் விளையாடிக்கொண்டிருந்தாயோ?
என்ன சொன்னாய்? ... "எனக்குப் பாட மட்டும்தான் தெரியும்..." என்றா?
அடடா! இதைத்தவிர, வேறு எதுவுமே உனக்குத் தெரியாதோ? அப்படியானால், ஒரு பெண்ணைக் கைப்பிடிக்கவேண்டும் என்பது மட்டும் எப்படித் தெரிந்தது ? அடப்பாவி! எங்கோ தூரம் தொலைவிலுள்ள அமெரிக்காக்காரர்களே ஈழப்படுகொலையை எண்ணி அழுகிறார்கள். உனக்குப் பாடுவதைத்தவிர வெறொன்றுமே தெரியாதா? பக்கத்துவீடு தீப்பிடித்து எரிந்தாலும்,
நீ பாட்டுக்கு பிடில் வாசித்துக்கொண்டுதான் இருப்பாயா? அதனாற்றான், ராட்சசபட்சேயின் மேடையில் பாடப் போனாயோ? அதாவது, பணம் வருமென்றால், எங்கு வேண்டுமானாலும் பாடுவதற்கு நீ தயார். அப்படித்தானே? இதையே இப்படி ஒருமுறை யோசித்துப்பார்!
உன்னைப்பெற்றவளைக் கேவலப்படுத்தவென்றே ஒரு விழா நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதிலும் போய், அவளையே கேவலப்படுத்திப் பாடிவிட்டு வருவாயோ ? உனக்கென்று ஒரு சொந்தப் புத்தி கிடையாதா ? கொஞ்சமாவது சொந்தமாக யோசித்துப் பார்க்கமாட்டாயா? உன்னை யாரோ மிரட்டியதாகக் குற்றஞ்சாட்டுகிறாய்.... ஆனால், யார் என்னவென்று தெரியாதென்கிறாய். வெறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன், பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக நிற்கிறாய். இப்படிக் குற்றஞ்சாட்டுவதானால், யாரும் எதுவும் சொல்லலாம்தானே!
"ஸ்ரீலங்காவில், அந்த மேடையில் வந்து பாடமுடியவில்லை.. அதற்காக, சுவிசில் இலவசமாகப் பாடித்தருகிறேன்" என்று நீ கருணா ஊடாக , ராட்சசபட்சேக்கு வாக்குறுதி கொடுத்ததாகவும் பேசிக்கொள்கிறார்களே! நீ சொல்வது உண்மையானால், ஏன் இதுவும் உண்மையாக இருக்கக்கூடாது? இதில், "பாடுவது எங்க புரபஷன்..". என்ற பீத்தல் வேறு. பாடுவது உனது "புரபஷன்" ஆக இருக்கலாம். ஆனால், வெளிநாட்டில் பாடுவது அல்ல. ஈழவிடுதலைப் போராட்டம் இல்லையென்றால், ஸ்ரீலங்காவிலேயே உன்னைக் கணக்கிலும் எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.
அவ்வளவுக்கு நீ பெரிய TMஸ் - SPB இல்லை. இந்தப் போராட்டத்தின் எதிரொலியாகத்தான் இன்று சுவிஸ்மண்ணில் தமிழர்கள் நிறைந்திருக்கிறார்கள். இந்தத் தமிழர்கள் அவ்வப்போது, ஐ. நா. முன்றலில் நடாத்தும் போராட்டங்களால் நிலைகுலைந்து போயிருக்கும் சிங்களம் அந்த மண்ணில் அவர்களின் பலத்தை ஒடுக்க மேற்கொள்ளும் சதி முயற்சிதான் இது என்பது, வெளிப்படையான விஷயம். இதையெல்லாம் கொஞ்சமும் அலசிப் பார்க்காமல், ஆவேசப்பட்டுப் பேட்டியா கொடுக்கிறாய்? வேறு என்ன சொன்னாய்? இங்கை என்ன மாஃபியாவா நடக்குது? என்றா கேட்டாய்?
மலையாளிகள் தமிழகத்தின் உயிர்நாடியையே உறுஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்..
மார்வாடிகள் ஆங்காங்கே நிலையெடுத்துத் தமிழகத்தையே ஆக்கிரமிக்கிறார்கள்..
உனது நாட்டு மீனவனைச் சிங்களன் நாயைச் சுடுவதுபோலச் சுட்டுத்தள்ளுகிறான்...
உனது நாடே, எதிரிக்கு ஆதரவாகச் செயற்படுகிறது....
இப்படியாக, எண்ணற்ற மாஃபியாக்கள் உன்னைச் சுற்றியே இருக்க.. நீ சுவிசிலேயா வந்து மாஃபியாவைத் தேடுகிறாய்? இறுதியாக உனக்கு ஒரு வேண்டுகோள்!
"நா தமிழ்ப்பொண்ணு... கிருசும் அப்பிடிதா..." என்று உன் மனைவி சொன்னது உண்மையானால் - நீங்கள் இருவருமே, தமிழ்ப் பெற்றோர்களுக்குத்தான் பிறந்தீர்கள் என்பது உண்மையானால்... தயவுசெய்து, இந்தப் பயணத்தை ரத்துச் செய்துவிடு! கண்ணாற்காண்பதும் பொய் காதாற் கேட்பதும் பொய் தீரவிசாரித்து அறிவதே மெய்!
நட்புடன்
சிவம் அமுதசிவம்
shabas sariyana pathiladi.... tamilandaaaaaaaaaaaaaa