Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர்கள் தாக்கப்பட்டது உண்மை - கலைஞர்

பதிந்தவர்: தம்பியன் 31 December 2011

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க., வலியுறத்தி வந்தது.

இந்நிலையில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி தி.மு.க, தலைவர் கலைஞருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படவில்லை எனவும், தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு தி.மு.க., தலைவர் கலைஞர் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது உண்மைதான். இது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. பெரியாறு அணை உறுதியாக உள்ளது என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

புதிய அணை கட்ட கேரளா முயற்சிப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ள கலைஞர், பெரியாறு அணை தொடர்பாக கேரளா தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

அமைதியை ஏற்படுத்த இரு மாநிலங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

0 Responses to தமிழர்கள் தாக்கப்பட்டது உண்மை - கலைஞர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com