Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக சென்னை, கோவையிலும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

மும்பையில் இன்று 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் அன்னா ஹசாரே. அவருக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி உள்ளிட்ட நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தைப் பொறுததவரை செனனை, கோவை உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் தொடங்கியது. சென்னையில் கோடம்பாக்கத்தி்ல உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இந்த உண்ணாவிரதம் தொடங்கியது. கிட்டத்தட்ட 50 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர்.

போராட்டம் குறித்து அதில் பங்கேற்ற ராதிகா என்பவர் கூறுகையில், அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். அடுத்து சிறை நிரப்பும் போராட்டத்தையும் அன்னா அறிவித்துள்ளார். அதிலும் பங்கேற்போம் என்றார்.

3 நாள் நடைபெறும் இந்தப் போராட்டத்திற்காக தனது கல்யாண மண்டபத்தை ரஜினிகாந்த் இலவசமாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல கோவை காந்திபுரத்திலும் பெரும் திரளானோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக ஊழலுக்கு எதிராக இந்தியா என்ற அமைப்பு நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தனது ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில்தான் 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்த அமைப்பினர் நடத்தவுள்ளனர். உண்ணாவிரதத்தில் அவரும் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.சமீபத்தில் சென்னைக்கு அன்னா ஹசாரே வந்திருந்தபோது தொலைபேசி மூலம் அவரிடம் பேசி அவரது போராட்டத்துக்கு அன்னா வாழ்த்து தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.அன்னா ஹசாரே தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த்

0 Responses to அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com