கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின், 19 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, நேற்று கொலன்ட் நாட்டின் றுர்மொன்ட் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
கப்டன் வின்ஸ்டனின் சகோதரி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். ஈகைச்சுடரினை கப்டன் கம்பனின் தாயார் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு மக்களால் சுடர் வணக்கமும், மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.
தமிழமுதம் இசைக்குழுவினரின் எழுச்சி கானங்கள், கவிதாஞ்சலி என்பன இடம்பெற்றதை அடுத்து தேசியக்கொடி இறக்கப்பட்டு தேச உணர்வோடும், நாங்கள் தமிழர்கள் என்ற இனமான உணர்வோடும் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தமது வழிகாட்டிகளுக்கும், மாவீரர்களுக்கும் இந்நாளில் வணக்கம் செய்திருந்தனர்.
கொலன்ட் நாட்டில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 19ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)
பதிந்தவர்:
ஈழப்பிரியா
09 January 2012
0 Responses to கொலன்ட் நாட்டில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 19ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)