Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு ஜனாதிபதி ஒபாமாவிற்கு அனுப்பும் வாழ்த்து மடலில் 2012ம் ஆண்டு வெற்றிகரமான சந்தோசமான ஆண்டாக தங்களுக்கு அமைய வேண்டுமென வாழ்த்துவதுடன், இந்த ஆண்டில் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் கேட்டுள்ளது.

இன்று உலகில் செல்வாக்கும் நிறைவேற்று அதிகாரமும் கொண்ட தாங்கள் தங்கள் செல்வாக்கைப் பாவித்து சிறிலங்காவில் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட தமிழர்களை அழியாமல் பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், இந்த ஆண்டு தங்களுக்கு வெற்றிகரமான சந்தோசமான ஆண்டாக மலர வேண்டுமென்றும் வாழ்த்துகின்றோம் என்றும் எழுதியுள்ளது.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மேலும் கூறுகையில் உலகில் ஒபாமாவின் பழு கூடிய வேலைகளையிட்டு பெருமைப்படுவதுடன், அவருக்கு ஆதரவாகவும், உதவியாகவும் தாம் இருப்பதாக கூறுகின்றது.

வரும் ஆண்டு அதிபர் ஒபாமாவிற்கு வெற்றிகரமான ஆண்டாக அமைய வேண்டுவதுடன், 2012இல் உலகம் முழுவதும் சமாதானம் உதயமாக வேண்டுமென்றும் அதற்குரிய பெருமை அமெரிக்காவிற்கே கிடைக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொள்கின்றனர்.

வரும் நவம்பர் மாதம் எதிர்கொள்ள இருக்கும் அதிபர் தேர்தலில் தாங்களும் தங்களின் கட்சி அங்கத்தவர்களும் அமோக வெற்றியைப் பெற வேண்டுமென்றும் நாட்டிலுள்ள வேலையில்லா திண்டாட்டம் குறைவடைந்து மிக சக்தி வாய்ந்த நாட்டில் பொருளாதாரம் வளர வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றது.

அதிபருக்கும் அவரின் குடும்பத்ததினருக்கும் இந்த ஆண்டு ஆரோக்கியமான மகிழ்வான ஆண்டாக அமைய வேண்டுமென்றும் கடிதத்தில் எழுதியுள்ளனர்.

கடிதத்தின் இறுதியில் தாங்கள் இந்த வருடம் உலகின் பல இடங்களில் பல நல்ல வேலைகளை செய்துள்ளீர்கள். இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை புரிய 2012 நிகழ்ச்சி நிரலில் இலங்கைத் தமிழர் விவகாரம் இடம்பெற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

கடிதத்தை ஆங்கிலத்தில் முழுமையாக பார்வையிட...

http://www.tamilsforobama.com/Letters/HappyNewYear_Obama.html

1 Response to 2012ம் ஆண்டு தமிழர்களுக்கு உதவி புரியும் நன்மையான ஒரு ஆண்டாக மலரட்டும்!: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

  1. தானாக மலராது நாங்கள்தான் மலரவைக்க வேண்டும்

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com