சம்மாந்துறை, கல்லரிச்சல் கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு பிறந்த குழந்தையை கொலை செய்து, தனது காதலனுடன் இணைந்து வீட்டின் அருகிலுள்ள சுவர் ஓரமாக புதைத்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு நாள் வயது மதிக்கத்தக்க சிசுவை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், இரண்டு பிள்ளைகளின் தயாரான சுமார் 35 வயது மதிக்கத்தக்க குறித்த பெண்ணும், 55 வயதான அவருடைய காதலனும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிசுவை கொலை செய்து புதைத்த பின்னர், தாய்க்கு ஏற்பட்ட இரத்தப் பெருக்கு காரணமாக அவர் வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனல் அவர்கள் கையில் பிள்ளை இல்லை. இது தொடர்பில் சந்தேகம் கொண்ட அயலவர்கள் சம்மாந்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டள்ளார். இதனையடுத்து, புதைக்கப்பட்ட சிசு, சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கணகரத்தினம் ஆனந்தி, கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.என். மென்டீஸ், கல்முனை அஷ்ரப் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் கிரியல்ல உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று பிற்பகல் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழந்தை வரம் இல்லாமல் கஷ்டப்படும் தம்பதியினர் ஏராளம். பிள்ளைகள் ஊனமாகப் பிறந்தால் கூட அவர்களை சாகும்வரை பராமரிக்கும் தாய்மார்கள் ஏராளம். ஆனால் அற்ப சுகத்துக்காக ஆணுறைகளைக் கூடப் பாவிக்காமல் உடலுறவு கொள்வதும். பின்னர் கருக்கலைப்புக் கூடச் செய்யாமல் பிள்ளைகப் பெற்று அதனை பேப்பரில் சுற்றி வீசுவதும் இல்லையேல் பற்றையில் போடுவதும் தமிழர் கலாச்சாரமாகிவிட்டதா ? இதற்கும் ஒரு படி மேலே போய் தானே கொன்று குழி தோண்டிப் புதைக்கும் அளவுக்கு தமிழ் தாய் மார்கள் என்ன இரக்கமற்றவர்களாக மாறிவிட்டார்களா ?
எமது இனம் எதனை நோக்கிப் பயணிக்கிறது என்பது தான் தெரியவில்லை.
கள்ளக் காதலுடன் பிறந்த குழந்தையை கொன்று குழி தோண்டிப் புததைக்க காதலி! (படங்கள்)
பதிந்தவர்:
தம்பியன்
09 January 2012
0 Responses to கள்ளக் காதலுடன் பிறந்த குழந்தையை கொன்று குழி தோண்டிப் புததைக்க காதலி! (படங்கள்)