Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென்னாபிரிக்கா ஆளும் கடசியின் அழைப்பையடுத்து உலகத் தமிழர் பேரவையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தென்னாபிரிக்கா சென்றடைந்துள்ளனர்.

கறுப்பின மக்களின் விடுதலைக்காக ஏறத்தாழ 100 வருடகாலமாக போராடி, கடந்த 1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உலகத் தமிழர் பேரவையை அழைத்தமையானது சர்வதேச சிறப்பும் வரலாற்றும் சிறப்பும் மிக்கதென்கிறார் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேந்திரன்.

தென்னாபிரிக்கா அரசின் ஆளும் கட்சியான தேசிய காங்கிரஸ் கட்சியானது தமிழ் மக்களுடன் நீண்ட கால உறவைப் பேணி வருகின்றது எனவும் குறிப்பாக விடுதலைப்புலிகள் ஆயுதமேந்தி விடுதலைக்காய் போராடிய காலம் தொட்டே தமிழ் மக்களுடன் தனது உறவைப் பேணி வருகிறதென உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுடடிக்காட்டியுள்ளார்.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி நூற்றாண்டு விழாவில் இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழர்கள் என்பதன் அடிப்படையில் கூட்டமைப்புடன் உலகத்தமிழர் பேரவை நலலுறவைப் பேணுகின்றதென உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டு விழாவை இலங்கை புறக்கணித்தது தொடர்பில் தமிழ்வின் வினாவிய போது,

அது இலங்கை அரசாங்கம் செய்த சரித்திர பிழையென தெரிவித்த சுரேந்திரன் தமிழர்க்ள சோர்ந்து விடாமல் சர்வதேச உறவினை பலப்படுத்தி தமிழர்களின் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தி விடுதலைக்காக போராட திட சங்கற்பம் பூண வேண்டுமென உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கையரசு வரலாற்று பிழை இழைத்துள்ளது!: உலகத் தமிழர் பேரவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com