Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


சசிகலாவின் சகோதரர் திவாகரை வழக்கில் கைது செய்வதற்காக கடந்த 21ம் தேதியில் இருந்து போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். அவரை காணாததால் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களான கார் ஓட்டுநர் சித்தார்த்தன், நண்பர் சிவானந்தம்,குரு, நடராஜன், அசோகன் உட்பட பலரை விசாரணைக்காக அழைத்து சென்று திருவாரூர் தனிப்படைபோலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு தஞ்சாவூரில் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் வீடு, சசிகலா கணவர் நடராஜனின் அண்ணன் சாமிநாதன் வீடு ஆகிய இடங்களில் திவாகர் இருக்கிறாரா என்று சோதனை செய்தனர்.

இன்று இரவு 7 மணிக்கு சசிகலாவின் அண்ணி இளவரசியின் சகோதரர் அண்ணாதுரை, நாகப்பட்டினம் ஏடிஎஸ்பி மணிவண்ணன் தலைமயிலான சிறப்பு காவல் குழு , கோட்டூரில் இருந்து அண்ணாதுரையை விசார ணைக்காக அழைத்துச்சென்றுள்ளது.

மன்னார்குடி வட்டம் கோட்டூர் ஒன்றியத்தின் செயலாளராகவும், சேர்மனாகவும் பதவி வகித்து வந்தார் அண்ணாதுரை. கடந்த மாதம் ஒன்றிய செயலாளர் பதவியை ஜெயலலிதா பறித்தார்.

இப்பதவி பறிபோனதால் தொடர்ந்து ஒன்றிய சேர்மன் பதவியில் பணபுரிய விருப்பம் இல்லாததாலும், ஒன்றிய சேர்மன் பொறுப்பில் இருந்தும், அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், தன்னை விடுவித்து கொள்வதாக திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனியநாதன் மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து திவாகரின் ஆட்கள், விசாரணைக்காக அழைத்துச்செல்லப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Responses to திவாகர் எங்கே? இளவரசியின் அண்ணன் அண்ணாதுரையிடம் விசாரணை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com