சமீபத்தில் தங்காலைப் பிரதேசத்தில் பிரித்தானியப் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக தங்காலை பிரதேச சபை அதிகாரி ஒருவர் கைதாகியிருந்தார் என்ற செய்தி பரவலாக வெளியாகியிருந்தது. 32 வயதான ஷைக்கா சமான் என்பவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்ட நபராவார். அவரது காதலியான விக்ரோரியா அலெக்ஸான்டநோவா என்பவர் சம்பவ தினமன்று கற்பழிக்கப்பட்டுள்ளதாக மதுபான விடுதி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசானது நடந்த இச் சம்பவதை மூடிமறைக்க மதுபான விடுதியில் நடந்த தகறாரில் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவரது காதலி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் எனவும் தெரிவித்துவருகிறது. ஆனால் அங்கே நடந்த கதையோ வேறு.
ரஷ்யப் பெண்ணான விக்ரோரியா அலெக்ஸான்டநோவாவின் துணிகளை உரிந்த சிலர் அவரைக் கற்பழித்ததாக நேரில் பார்த்த சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை அவரின் காதலன் நிலத்தில் ரத்தவெள்ளத்தில் கிடந்ததாகவும் ஊழியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். ஆனால் இக் கூற்றை இலங்கையில் தொழில் துறை பிரதி அமைச்சர் லக்ஷ்மன் அபயவர்த்தன திட்டவட்டமாக மறுத்துள்ளார். இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ளனர் என இலங்கை அரசு மார்தட்டிக் கொள்ளும் இந்தவேளை, இலஙை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அங்கே பாதுகாப்பு இல்லை என்பது நடந்த இக்கொலையில் இருந்து தெரியவருவதாக சில ஆங்கில இணையத்தளங்கள் செய்திவெளியிட்டுள்ளது.
இருப்பினும் இச் சம்பவத்தை இலங்கை அரசானது மூடிமறைக்க பல வழிகளிலும் முனைப்புக் காட்டி வருகிறது.
This Is Not True,You Dont Know To Story About Tamil Ealam,This Is All By Some One Like You,Muslims Also Tamils,If You Are Saying True You Dont Need To Hide Your Name,Dont Make Problem To Tamil Nation,(Hindu+muslim+Christian=Tamil Nation)Ungalaippola Sila suya Nalavathiglinal Than Thamil Pesum Engalukku Ippadiyoru Adimail Vazhkai,