Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 02-01-2006 அன்று திருகோணமலையில் இராணுவத்தினரின் இனவெறித் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவனான மனோகரன் ராஜிகரின் உருவம் பொறிக்கப்பட்ட இந்த முத்திரையை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பும், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்களின் அமைப்பும் அமெரிக்காவிலிருந்து வெளியிட்டுவைக்கின்றது.

சிறிலங்காவில் தமிழர் மீதான மனித உரிமைகள் மீறப்படும் சமயங்களில் அந்தச் சம்பவங்கள் மூடிமறைக்கப்படுவதுடன், இந்தக் குற்றங்களை புரியும் எவரும் தண்டிக்கப்படுவதுமில்லை. இது இன்று நேற்றல்ல சிறிலங்கா சுதந்திரம் பெற்றதாகக் கூறப்பட்டதாக காலம் தொடக்கம் நடைபெற்று வருகின்றது என்பதை உலகம் அறிந்ததே.

இதை அறிந்த உலக நாடுகள் சிறிலங்கா அரசை கண்டும் காணாதது போல இருப்பதுதான் உலக நடைமுறையாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இந்த குற்றங்களை உலக அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். சிறிலங்கா அரசு மீது நடவடிக்கை எடுக்க யோசிக்க வேண்டும். இதற்காக புலம்பெயர் சமூகம் முன்வந்து உழைக்க வேண்டும். இந்த முத்திரை வெளியீட்டு நிகழ்வு இதை உறுதிப்படுத்துவதாகவே அமைகின்றது.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு (Tamils for Obama)
இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு (TAG)

0 Responses to மனோகரன் ராஜிகரின் ஆறாம் ஆண்டு நினைவான முத்திரை அமெரிக்காவி​ல் வெளியீடு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com