நெடுந்தீவுப் பகுதிகளில் பல மனைவிமார்களை வைத்துள்ளதாக டக்ளஸ் தேவானந்தா மீது பாராமன்றில் அதிரடித் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் விஜயகலா எம்.பி.
பாராளுமன்றத்தில் முழங்கிய விஜயகலா எம்.பி., மகேஸ்வரனைக் கொன்றது முதல் தென்மராட்சிப் பகுதியில் கொலை செய்தது வரை எல்லாமே நீங்கள்தான் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது சொற்தாக்குதல் நடத்தியுள்ளார்.
இவரின் துணிகரப் பேச்சினால் பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் கரகோஷம் எழுப்பியதுடன், டக்ளஸ் தேவானந்தாவின் முகத்தில் அறைந்தது போல் இருந்தது.
நெடுந்தீவில் பல மனைவிமார்களை வைத்துள்ள டக்ளஸ்! (காணொளி இணைப்பு)
பதிந்தவர்:
ஈழப்பிரியா
12 January 2012
Unmaiyai Sonna Vijayakalavukku Romba Nanry.
நன்றி விஜயகலா எம்.பி.
உலகத்தலைவன் என்னும் பாணியில் உள்ளதைச் சொல்லுகிறேன் என்று வந்து விட்டானே என்று அங்கலாய்க்காதீர்கள். உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பலரும் பல கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் பார்வ்வைக்குப் பார்வை காட்சிகள் வித்தியாசப்படுகின்றன. நாம் காணும் காட்சியை எப்படி பார்க்க விரும்புகிறோமோ அப்படியே பார்க்கத் தலைப்படுகிறோம். அது தவறில்லை ஆனால் அந்தப் பார்வைக்கு நாம் கற்பித்த அர்த்தத்தை மற்றவர் மீது திணிக்கத் தலைப்படும் போதுதான் நிலமை மோசமடைகிறது. அந்தத் திணிப்புகள் வெறும் திணிப்புகளாக மட்டும் இருந்து விடாது மற்றவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் நிலையை அடையும் போது அது மனிதர்களின் வாழ்வின் அடிப்படையே அசைக்கிறது. எதற்கு இவ்வளவு பீடிகை ? உங்கள் கேள்விகள் என் காதுகளில் விழுகிறது. ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை பலராலும் பல அரசியல் தேவைகளுக்காகப் பந்தாடப்படும் நிலையைப் பார்க்கும் போது நெஞ்சத்தில் எழும் வேதனையின் ஒலி மெளனமாய் இதயத்தில் வலிப்பதனால் காகிதத்தில் விழுகிறது. புலிகள் அழிக்கப்பட்டார்களா ? இல்லை அவர்களது சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டதா? இதைப்பற்றியெல்லாம் ஆராயும் அளவிற்கு புத்தி ஜீவியல்ல நான். ஆனால் புலிகளின் காலம் என்றொரு காலம் ஈழத்தின் அரசியல் வரலாற்றில் இருந்தது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அந்தக்காலம் ஈழத்தமிழர்களின் வரலாற்றை ஒளியுறச் செய்ததா? அன்றி இருளடையச் செய்ததா? என்பதுவே கேள்வி. பிரபாகரன் என்றொரு மனிதன் ஈத்தமிழர்களின் வரலாற்றில் மறைக்கப்பட்முடியாத அடையாளத்தை விட்டிருப்பது மட்டும் உண்மை என்பது தெளிவு. அதன் தாக்கம் எத்தகையது என்பதை இப்போது என் அன்பான புலி ஆதரவாளர்கள் என்னும் பெயரில் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ் அன்பர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் காலத்தின் சக்கரச் சுழர்வில் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் என்பது உண்மை. அதற்காக ஈழத்தமிழ் போராட்டங்களில் ஈடுபட்ட மற்றைய இயக்கங்கள் அனைத்தும் சுத்தமான வெள்ளைப்புறாக்கள் என்று நான் கூறவில்லை. ஈழத்து தமிழர்களின் அரசியல் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்று கோஷமிட்டு உண்மையான உணர்வுகளினால் உந்தப்பட்டு அந்த இலட்சியத்துக்காக தம்மை ஈந்த உன்னதமான எம் தமிழ் உயிர்கள் பலவற்றை விடுதலை இயக்கங்கள் அனைத்துமே முற்றிலும் சரியான வழியில் தான் வழிநடத்தினார்களா ? என்பது கேள்வியே. ஏன் இன்று ஈழத்தமிழன் இந்த நிலையை வந்தடைந்துள்ளான். சிந்தித்துப்ப்பார்க்கிறேன் உண்மையாக, உள்ளதைச் சொல்லப்போனால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருமே தாம் சார்ந்த இயக்கங்களை நேசித்தார்களே ஒழிய தமிழர்களின் விடுதலையை நேசிக்கவில்லை. ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழி என்பதை தாம் சார்ந்த இயக்கங்கள் என்னும் குறுகிய ஜன்னல் வழியாகப் பார்த்தார்களே ஒழிய, தமிழர்கள் என்னும் பரந்த பார்வையைக் கொண்டிருக்கவில்லை. இன்றும் கூட என்ன நடந்து கொண்டிருக்கிறது? புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம், தமது என்னும் சுயநலப்போக்கான பார்வையைக் கொண்டிருக்கிறார்களே ஒழிய ஈழம் என்னும் அந்த குறுகிய நிலப்பரப்புக்குள் தமிழர் வாழும் பகுதிகள் என்னும் இன்னும் குறுகிய நிலத்தினுள் அடைப்பட்டு, அல்லல் பட்ட தமிழர்களின் நலன்களைக் கணக்கிலெடுத்துக் கொள்கிறார்களா என்பது சந்தேகமே? போராட்டத்தின் உசச நிலைக்குள் ஈழத்தின் வடபுலம் சிக்கிக் கொண்டிருந்த வேளையில் அங்கு சென்று வந்த என் நண்பனொருவன் கூறிய செய்தி. தான் சென்ற ஒரு இல்லத்தில் வசிக்கும் சிறுவன் தன் தந்தையிடம் மேலே பொருத்தப்பட்டிருக்கும் மின்விசிறியைக் காட்டி அது என்ன? அது ஏன் அங்கே பொருத்தப்பட்டிருக்கிறது.
அந்தக் கேள்விக்கு என்ன காரணம், அந்தக்காலகட்டத்தில் வடபகுதியில் மின்சாரமே இல்லாமல் இருந்ததால் அந்த மின்விசிறி இயங்கி அந்தச் சிறுவன் பார்த்ததேயில்லை அவனுக்கு அந்த மின்விசிறியின் இயக்கம் என்னவென்றே தெரியாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அப்படியான ஒரு இருளடைந்த காலகட்டத்தை கடந்து, பசி, பட்டினி, பஞ்சம், வியாதி என்னும் பல நிலைகளை அம்மக்கள் அனுபவித்த போது புலம்பெயர்ந்தோர்கள் வசதியாகத்தான் வாழ்ந்தார்கள் ஈழத்தில் வாழும் தம் தொப்புள் கொடி உறவுகளின் மூலம் தமது கொள்கைகளைப் பரீட்சித்துப் பார்க்கத் தலைப்பட்டார்கள். அது மட்டுமா? தமக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்று கூறிய இயக்கங்கள் மீதமிருந்த தமது ஒன்றிரண்டு சுதந்திரங்களையும் பறித்து ஆயுத பலத்தின் அதிகாரத்தை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அனைவரும் இயக்கங்களின் விசுவாசத்தைத் தான் சுவாசித்துக் கொண்டிருந்தோம். அதற்கு நாம் சூட்டிய பெயர் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம். இயக்கங்கள் தம்முள் நடந்த உட்கட்சிப் போராட்டங்களினால் உயிரிழந்த தமிழ் இளைஞர், விடுதலையின் பெயரால் மாற்று இயக்கத்தினரால் காவு கொள்ளப்பட்ட இளைஞர், யுவதிகள். நாமே தமிழரின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்ட புலிகளால் காவு கொள்ளப்பட்ட இளம் உயிர்கள் .
ஈழப்போராட்டத்தை நசுக்குகிறோம் என்று தம்மோடு பொருதிய புலிகளை எதிர்க்கிறோம் என்று சிறீலங்கா அரசு எடுத்த இராணுவ நடவடிக்கைகளினால் அழிந்த உயிர்கள். பழிக்குப்பழி என்று புலிகளினால் காவு கொள்ளப்பட்ட சிங்கள மக்கள். அப்பப்பா, ஒரு இனத்தின் விடுதலைக்காக நாம் கொடுத்த விலை. . . எண்ணிப்பார்க்கவே நெஞ்சம் அச்சத்தால் நடுக்குகிறது.
சபாஸ் விஜயகலா! முறம் கொண்டு புலியடித்த தமிழச்சியை புறநானூற்றில் படித்தோம், தன்னந்தனியாக
நின்று ஒரு குழுமாட்டோடு சமர்புரிந்த தமிழச்சியை இப்போது பார்க்கிறோம். தசரதனுக்கு அறுபதாயிரம்
பெண்டாட்டிகள் , டக்ளசுக்கு எத்தனையோ ???? எதற்கும் அவதானமாக இருங்கள் ! ஏனெனில்--- ஐந்து
நட்சத்திர ஜனநாயக வாதி ,,, தீவுப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துகொண்டு ,
வேறு கட்சிகளை உள்நுழையாமல் தடுத்து, வாக்காளர்களை அடித்து விரட்டிவிட்டு , தாங்களே தங்கள்
இஸ்டம் போல் வாக்குப்பெட்டிகளை நிரப்பி ஜனநாயக வழியில் தெரிவான ஒரே பிரதிநிதி. உங்கள்
கணவருக்கு ஜனநாயக ரீதியில் பரிசு வழங்கியவர்கள், உங்களுக்குக்கூட ஒரு ஜனநாயகப் பரிசு
வழங்கினாலென்ன என்றுகூட சிந்திக்கலாம் , அல்லது யாழ்பாணத்தில் இருந்த அலன் தம்பதியினரைக்
கடத்தி வைத்துக்கொண்டு பல கோடிரூபா பணத்தையும் , பல கோடி பெறுமதியான தங்கத்தையும்
கப்பமாகக் கேட்டதுபோல், உங்களையும் கடத்தி வைத்துக்கொண்டு கப்பப்பணத்தை வியாபாரப்
பங்காளி ராஜபக்சவிடம் கொடுத்தால்தான் விடுவோம் அல்லது ஜனநாயகப் பரிசு என்று மிரட்டலாம்.
எதற்கும் சூளைமேட்டை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு அவதானமாக இருக்கவும்.
இந்த தமிழ் அரசியல் வாதிகளுக்கு எங்கு என்ன பேசவேண்டும் என்ற விவஸ்தை கூட இல்லை. இப்படியே ஒவ்வொருவரின் குற்றங்களை பாராளுமன்றங்களில் பேசி உங்கள் சொந்தப் பிரச்சனைகளை மட்டும் பாருங்கள். தமிழர்களின் பிரச்சனைகளை பேசாதீர்கள். எங்கள் தமிழ் இனத்துக்கே ஒற்றுமை இல்லாத போது எங்கள் தமிழர்களுக்கு எங்கு விமோச்சனம் வரப்போகின்றது. பரிதாபத்துக்குரிய அபலைகள்!!!