அந்தமான் தீவுகளில் பணத்திற்காக சுற்றுலா பயணிகள் முன்னிலையில் பழங்குடியினரை அரை நிர்வாணமாக ஆடவிட்ட சம்பவம் இந்தியாவிற்குப் பெரும் அவமதிப்பை தோற்றுவித்துள்ளது..
காவற்துறை அதிகாரி ஒருவர், செல்வந்த சுற்றுலா பயணிகளிடம் லஞ்சப்பணம் பெற்றுக்கொண்டு அந்தமான் தீவுகளின் பூர்வீக பழங்குடியின பெண்களை அரை நிர்வாணமாக ஆட வைத்து காட்சிப்படுத்தியுள்ளார். அந்த பொலிஸ்காரர் உணவு தருவதாக கூறி அப்பெண்களை கட்டாயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடனக்காட்சிகளை குறித்த சுற்றுலா பயணிகள் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். தற்போது அவை கசிந்துள்ளதால் இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எப்படி பழங்குடியின மக்களை பணத்திற்காக அரை நிர்வாணமாக நடனமாட அனுமதிக்கலாம் என அந்தமான் நிக்கோபார் தீவு அரசாங்க பிரிவுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது வேதனைக்குரியதும், ஏற்றுக்கொள்ளப்படவே முடியாததுமானது எனவும் சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பழங்குடியின மக்கள் துறை அமைச்சர் கே.பி.சிங் தேவ் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் முதன்முறையாக நடைபெறுகிறதா, அல்லது வழமையாக தொடர்ந்தவொரு நிகழ்வா என்பது சந்தேகத்தையும் தற்போது தோற்றுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளுரில் பழங்குடி மக்கள் மீதும், மலைவாழ் மக்கள் மீதும் காவல்துறையினரின் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுக்கள் பல அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகின்ற போதும், அரசியற் செல்வாக்குகளினால் அவை மறைக்கப்பட்டு விடுவது வழக்கம். ஆயினும் இந்த விவகாரம் வெளிநாடுகளுடன் தொடர்பு பட்டுள்ளமையால் உரிய விசாரணைகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் முன் பழங்குடியினரை அரை நிர்வாணமாக ஆடவைத்த காவலர்
பதிந்தவர்:
தம்பியன்
11 January 2012
enda antha ponu un thangachiya iruntha adaviduviyada