தமிழகத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை சித்தரிக்கும் சினிமாவிற்கு தடை விதிக்க வேண்டும் என வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்த போது;
வீரப்பனின் வாழ்க்கையை வனயுத்தம் என்ற பெயரில் படமாக்க போவது தொடர்பில் அப்படத்தின் இக்குனரோ அல்லது தயாரிப்பாளரோ என்னிடம் எந்த அனுமதியும் பெற்றுக் கொள்ளவில்லை.
சென்னையில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் வேளையில் வீரப்பனின் கடைசி கால வாழ்க்கை குறித்து எடுகப்பட்டுள்ள இப்படத்தில், என்னையும் எனது கணவரையம் தவறாக சித்தரிக்கும் விதத்திலும், எங்கள் மீது இன்னமும் நிலுவையிலுள்ள வழக்குகளை குறிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். ஆதலால் இந்த படத்தை வெளியிடுவதைத் தடைசெய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
வனயுத்தம் என்ற பெயரில் இயக்குனர் ரமேஷ் வெளியிட்டுள்ள இப் படத்தில் வீரப்பன் வேடத்தில் கிஷோரும், முத்துலட்சுமி வேடத்தில் நடிகை விஜயலட்சுமியும் நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீரப்பனின் வாழ்க்கையை சித்தரிக்கும் சினிமாவிற்கு தடை வேண்டும்: முத்துலட்சுமி
பதிந்தவர்:
தம்பியன்
11 January 2012
0 Responses to வீரப்பனின் வாழ்க்கையை சித்தரிக்கும் சினிமாவிற்கு தடை வேண்டும்: முத்துலட்சுமி