உச்சிதனை முகர்ந்தால் சாதாரண திரைப்படமல்ல அது ஒரு இன மக்களின் உணர்வு. நாம் தமிழனாக வாழப்போகிறோமா அல்லது அடிமையாய் சாகப்போகிறோமா என்ற கேள்வியை நாம் அனைவரும் கேட்கவேண்டும் கேட்க வேண்டிய கேள்வியை எழுப்புகின்றது.
இலங்கை இராணுவம் அசிங்கமான கொடூரத்தின் உச்ச கட்டத்தை அடைந்து ஒரு இனத்தை எப்படி சீரழித்தார்கள் என்ற உண்மையையும், தமிழீழத்தின் மட்டக்களப்பில் அழிந்த ஒரு குடும்பத்தின் உண்மையை கதையையும் தமிழக மக்கள் பல தடைகளையும் மீறி தமிழீழ மக்களுக்கு கொடுக்கும் ஆதரவு கரங்களின் அர்ப்பணிப்பும் தான் உச்சிதனை முகர்ந்தால்.
தமிழனாய் நாம் இனிமேலும் தலைகுனிந்தோ கை நீட்டியோ வாழ முடியாது என்று ஒவ்வொருவரிடமும் அவரது மனசாட்சியிடம் கேள்வி எழுப்பும் அதே நேரத்தில் அதற்குரிய பதிலையும் அளிக்கிறது இந்தத் திரைப்படம்.
சினிமாவுக்கான சமரசங்கள் இதில் எதுவும் இல்லை. இது ஒரு ஈழதமிழ் சிறுமியின் காவியம். இத்திரைப்படத்திலுள்ள நிஜம் அனைவரின் மனதையும் உலுக்கப் போகிறது என்பதை விட உறக்கம் கெடுக்க வைத்து உள்ளம் குமுற வைக்கும் என்பதுதான் உண்மை.
“இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ
இழிவாய் கிடக்க செருப்பா நீ
ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே
ஒரு தீபன் அணையும் முன்னே துடிக்கிறதே
துடித் துடித்து உடல் சிதைகிறதே
தினம் தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே
என் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள்
அவர் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்.......”
தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ்.
தமிழனாக வாழப்போகிறோமா அல்லது அடிமையாய் சாகப்போகிறோமா? - த.ம.பே.பிரான்ஸ்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
02 January 2012
0 Responses to தமிழனாக வாழப்போகிறோமா அல்லது அடிமையாய் சாகப்போகிறோமா? - த.ம.பே.பிரான்ஸ்