Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த கால் நூற்றாண்டாக அதிகாரத்தில் இருந்து வரும் 71 வயதாகும் சூடான் அதிபர் ஒமர் ஹஸ்ஸன் அல்-பஷீர் அண்மையில் நடந்த தேர்தலில் 94% வீதமான வாக்குகளால் அபார வெற்றி பெற்றிருப்பதாக இன்று திங்கட்கிழமை அறிவிக்கப் பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் இன்னொரு முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சூடானில் தனது பிடியை இவர் தக்க வைத்திருக்க இன்னொரு சந்தர்ப்பம் வழங்கப் பட்டுள்ள நிலையில் இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தலை எதிரணியினர் புறக்கணித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்ட பின் கார்ட்டௌமில் செய்தியாளர் மாநாட்டில் பேசிய தேசிய தேர்தல் கமிசன் தலைவர் முக்தர் அல் அசிம், அதிபர் பஷீர் 94.05% வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்ததாகவும் அவரது ஆளும் தேசிய காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்திலுள்ள 426 சீட்டுக்களில் 323 ஐ சுவீகரித்துப் பெரும்பான்மைப் பலம் அமைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை நடந்து முடிந்த வாக்களிப்பில் அதிபர் பஷிர் எப்படியும் வெற்றி பெற்று விடுவார் என்ற நம்பிக்கையில் கணிசமான அளவு மக்கள் வாக்களிப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என சூடானின் வெஸ்ட்மின்ஸ்டெர் பல்கலைக் கழகத்தின் நிபுணரான அப்டெல்வஹப் எல் எஃப்பெண்டி தெரிவித்துள்ளார். அண்மையில் தான் சூடானின் உள்நாட்டில் நிலவி வரும் குழப்ப நிலையைத் தீர்ப்பதற்கு ஞாயமான தேசிய பேச்சுவார்த்தைக்கு அந்நாட்டு அரசு முன்வரவில்லை என ஐரோப்பிய யூனியன் குற்றம் சாட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2003 ஆம் ஆண்டுப் பகுதியில் சூடானின் டார்ஃபுர் கிளர்ச்சியின் போது நடைபெற்ற இனப் படுகொலைகள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல் அட்டூழியங்களுக்குப் பின்னணியில் பஷீர் சூத்திரதாரியாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே ஓர் மனுத் தாக்கல் செய்யப் பட்டுள்ளது என்பதுடன் இதனை பஷீர் மறுத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to 94% வீத வாக்குகளால் சூடான் அதிபர் பஷீர் தேர்தலில் அபார வெற்றி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com