Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பிலான திருத்திய வரைவு திட்டத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி வரைவு திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் இந்த வரைவு திட்டத்தை தாக்கல் செய்தார். மத்திய அரசிடம் முறையிட வேண்டும் என்ற விதியை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமனறம் உத்தரவிட்டு இருந்தது. இதனால் மத்திய அரசிடம் முறையிட வேண்டும் என்ற விதி அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

காவிரி வரைவு திட்டத்தை பொறுத்த வரையில், இரு மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை வரும்போது மத்திய அரசு முடிவு எடுக்கும், வாரியம் இறுதி முடிவு எடுக்காது என்ற அம்சம் இடம்பெற்றிருந்தது. அந்த அம்சத்தை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

குறிப்பாக கர்நாடகா, கேரளா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநில அரசுகளும் மத்திய அரசு முடிவு எடுக்கும் என்ற அம்சத்தை கடுமையாக எதிர்த்தனர். இதனால் உச்சநீதிமன்றத்தில் திருத்தம் செய்து வரைவு திட்டத்தை மத்திய அரசு தாககல் செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டம் மீதான வழக்கில் நாளை மாலை 4 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் நாளை தீர்ப்பு வழங்காவிடில் மே 22 அல்லது 23 ஆம் தேதிகளில் தீர்ப்பளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயர் மேலாண்மை ஆணையம் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வரைவுத்திட்டத்தில் Cauvery Water Management Authority என பெயர் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்படலாம் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நேற்று உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவிக்காத மத்திய அரசு இன்று பெயர் மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ‘காவிரி மேலாண்மை வாரியம்’ எனும் பெயர் ‘மேலாண்மை ஆணையம்’ என்று மாற்றம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com