Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவில் இனி நடைபெறும் அனைத்து வகையான தேர்தல்களிலும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் வாக்களிக்கலாம் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.

இதையடுத்து, விரைவில் நடைபெறவுள்ள இந்திய வடக்கு ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க முடியும் நிலை தோன்றியுள்ளது.

வாக்களிக்க விரும்புவோர் முதலில் தங்களது பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் 10 வது வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மாநாட்டில் பேசும் போது அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

முன்னதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான காப்புறுதி மற்றும் ஓய்வூதிய திட்டம் என்பவற்றையும் அவர் அறிவித்தார். இதன் மூலம் 50 இலட்சம் பேர் பயடனைவார்கள் எனவும், இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சந்தா தாரும், மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அரசு ஆண்டுக்கு ஸி1000 செலுத்தும் எனவும் அவர் அத்திட்டத்தை விவரித்தார்.

0 Responses to இனி தேர்தல்களில் வெளிநாட்டு இந்தியர்களும் வாக்களிக்கலாம்: மன்மோகன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com