Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கருநாடகமாநிலத்தில் நடைபெறஇருக்கும் "பொங்குதமிழ் 2012" நிகழ்வில் பங்குபற்றுவதற்கு தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொங்குதமிழ் ஏற்பாடளர்கள் தெரிவித்துள்ளனர்.

இம் மகாநாட்டை கருநாடக முதல்வர் ஆரம்பித்து வைப்பதற்கு இசைந்திருக்கிறார். அத்துடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலர் திரு வை.கோ, நாஞ்சில்சம்பத். உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா திரு பழ நெடுமாறன், திரு. தமிழருவிமணியன், உணர்ச்சிக்கவிஞர் திரு காசிஆனந்தன், மலேசியா பினாங்கு துணைமுதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, மலேசியா தமிழ் நெறிக்கழகத் தேசியத்தலைவர் திரு திருமாவளவன், மற்றும் ஐரோப்பியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலிருந்து தமிழ் ஆர்வலர்களும், அறிஞர்களும், பேராசியர்களும் பங்குபற்ற இணங்கியுள்ளனர் அவர்களது விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

இலக்கு நோக்கிய பயணத்தில் காலத்தின் கட்டாயம் கருதி தமிழின ஒற்றுமையை நிலைநாட்டவும், பேணிக்காக்கவும் உலகில் தமிழன் எவருக்கும் சளைத்தவனில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவும் நாம் அனைவரும் வேறுபாடுகளைமறந்து ஒற்றுமையாய் செயல்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

0 Responses to கருநாடக பொங்குதமிழுக்கு தமிழக முதல்வருக்கு அழைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com