கடந்தாண்டு இதே நாளை(மார்ச் 11,2011) ஜப்பான் மக்களால் மட்டும் அல்ல, உலகில் உள்ள எவராலும் மறக்க முடியாது. பயங்கர நிலநடுக்கம், சுனாமி அதனைத் தொடர்ந்து புகுஷிமா அணு உலை விபத்து என ஜப்பானை உலுக்கி கொண்டிருந்தது.
ஜப்பானின் வடகிழக்கு பகுதி தீவான ஹான்ஷூ அருகே பசிபிக் கடல் பகுதியில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் திகதி காலை 11.16மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
140 ஆண்டுக்குப் பிறகு நடந்த 8.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் தலைநகர் டோக்கியோ உட்பட கிழக்கு கடலோர நகரங்கள் நாசமாகி விட்டன.
மேலும் ஐவேட், மியாகி, புகுஷிமா ஆகிய மூன்று மாகாணங்கள் இதில் பேரிழப்பைச் சந்தித்தன. இச்சோக சம்பவத்தில் 15 ஆயிரத்து 800 பேர் பலியாயினர். 3,200 பேர் காணாமல் போயினர்.
20 ஆயிரம் பேரை பலிகொண்ட ஜப்பான் நிலநடுக்கம்: ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு
பதிந்தவர்:
தம்பியன்
11 March 2012
0 Responses to 20 ஆயிரம் பேரை பலிகொண்ட ஜப்பான் நிலநடுக்கம்: ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு