இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எனப்படும் மலையகத் தமிழர் கட்சியின் தலைவரும், கால்நடை மற்றும் கிராம வளர்ச்சித்துறை அமைச்சருமான ஆறுமுக தொண்டமான் தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவுக்கு அனுப்பியுள்ளார்.
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் அமைச்சரவையில் கால்நடை மற்றும் கிராம வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுக தொண்டமான். இந்நிலையில் அவர் நேற்று திடீர் என்று தனது ராஜினாமா கடிதத்தை இமெயில் மூலம் அதிபர் ராஜபக்சேவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவரது ராஜினாமாவை ராஜபக்சே ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
தனது அமைச்சகத்திற்கு உயர் அதிகாரியை நிமிப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சனையாலும், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களின் மலையகப் பிரதேசங்களுக்கான உரிய நிதியை ராஜபக்சே அரசாங்கம் ஒதுக்கவில்லை என்பதாலும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அரசு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை. இது குறித்து அரசு உயர் அதிகாரிகள் பலர் அவரை நேற்று சந்தித்து பேசியுள்ளனர்.
இந்நிலையில் சிலோன் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ஆறுமுக தொண்டமான் ஏற்கனவே இந்தியாவுக்கு புறப்பட்டுவிட்டார். அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து கட்சிக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
ராஜபக்சேவுக்கான ஆதரவை விலக்கியது மலையகத் தமிழர் கட்சி?
இந் நிலையில் மகிந்த ராஜபக்சே அரசாங்கத்துக்கு அளித்து வந்த ஆதரவையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எனப்படும் மலையகத் தமிழர் கட்சி விலக்கிக் கொள்ளும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
உண்மையான காரணம் என்ன?
ஜெனீவா தீர்மானத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலையை இலங்கை மேற்கொள்ளக் கூடும் என்பதால் முன்கூட்டியே ராஜபக்சவிடமிருந்து விலகியிருக்கவே ஆறுமுகம் தொண்டமான் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் அவர் பதவி விலகியதாகவும் தெரிகிறது.
அதே நேரத்தில் இலங்கை தொடர்பாக இந்திய அரசாங்கம் புதிய நிலைப்பாட்டை மேற்கொள்ளக் கூடும் என்ற தகவல்களைச் சுட்டிக்காட்டி ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை வெளியேற வைத்தது இந்தியாதான் என்றும் ஒருதரப்பினர் கூறுகின்றனர். இது தொடர்பாக விவாதிக்க ஆறுமுகம் தொண்டமான் இந்திய பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆறுமுகம் தொண்டமான் தான் அண்மையில் கோவையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது அதிகமான குடிபோதையில் தகராறில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
0 Responses to தொண்டமான் இராஜினாமா?