Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் தலைவர்களின் காதுகளிலும், வட இந்திய தலைவர்களின் காதுகளிலும் காலகாலமாக கொத்துக் கொத்தாக பூக்களை கட்டி தொங்கவிட்டு வரும் சிறீலங்கா இனவாத அரசுக்கு தமிழர் கூட்டமைப்பு புத்தி சொல்லியுள்ளது. ஜெனீவா போக விடாது மிரட்டி, ஏமாற்றி கூட்டமைப்பின் காதில் பூச்சரம் கட்டியது போதாதென்று இப்போது சர்வதேசத்திற்கும் கட்ட ஆரம்பித்துள்ள சிங்கள அரசுக்கு கூட்டமைப்பு புத்தி கூறியுள்ளது. தமிழர்களும், இந்தியர்களும் சிங்கள இனவாத அரசிடம் கால காலமாக ஏமார்ந்து வருவதால்தான் அந்த அரசு இப்போது உலகத்தை ஏமாற்ற புறப்பட்டுள்ளது. இது குறித்த செய்தி வருமாறு :

சீனாவும், ரஷ்யாவும் தமது பக்கம் உள்ளன என்ற மமதையில் இலங்கை அரசு தொடர்ந்தும் உலகை ஏமாற்றுமானால், ஒரு காலகட்டத்தில் அந்நாடுகளும் இலங்கை யைக் கைவிடலாம். எனவே, ஜெனிவாத் தீர்மானத்தை எதிர்த்து இலங்கை அரசு அடம்பிடிக்காமல் செயற்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசுடன் பேசுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். இருப்பினும், எமது நிலைப்பாட்டில் சிறிதளவேனும் மாற்றம் இல்லை என்றும் அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை ஏற்று உரிய நடவடிக்கைகளை கையாளமாட்டோம் நாம் தொடர்ந்து எமது பாதையிலேயே செல்வோம் என்றும், தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் இலங்கை அரசு நேற்று தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச் சந்திரனிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு: நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையில் ஒரு விடயம் மட்டும் குறிப்பிடப் படவில்லை. வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள மேலதிக இராணுவத்தை அகற்றவேண்டும் என்பது உட்பட பல விடயங்கள் அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளன.

இதனை அரசு செய்யவேண்டும். தீர்வு விடயமும் அதனுள் உள்ளடக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோரைக் கண்டுபிடிக்கும் வேலைத்திட்டத்தை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் ஆணைக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், அரசு இதுவரை ஒன்றையும் செய்யவில்லை.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தோர் தொடர்பான புள்ளிவிவரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை. தமது பிள்ளைகளை படையினரிடம் ஒப்படைத்த பெற்றோர் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதுகூட தெரியாமல் தவிக்கின்றனர்.

இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல் படுத்துமாறே ஜெனிவாத் தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது. எனவே, இந்தத் தீர்மானத்தை மதிக்காமல் அரசு அடம்பிடிக்கு மானால் மென்மேலும் சர்வதேச அழுத்தங்கள் குவியும். என்றார்.

0 Responses to தமிழரையும் இந்தியரையும் ஏமாற்றியது போல சர்வதேசத்தை ஏமாற்ற வேண்டாம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com