Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணை குறித்து இதுவரை இந்திய அரசு முடிவெடுக்கவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

மேலும், இலங்கையுடன் தமக்கு நீண்ட காலமாக நல்லுறவு நீடித்து வருவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு செல்லும் வழியில் நேற்று சென்னை வந்த அவரிடம், “அமெரிக்கா, ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்துள்ளது.

அதை இந்திய அரசு ஆதரிக்கப் போகிறதா, அல்லது எதிர்க்கப் போகிறதா?' என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், “அது குறித்து இன்னும் டிவு எடுக்கப்பட வி ல்லை.

யோசித்து முடிவெடுப்போம். தமிழக தலைவர்கள் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவற்றைக் கவனத்தில் கொள்வோம் என்றார்.

இதேவேளை, இலங்கைப் பிரமுகர்கள் முன்னறிவிப்பின்றி தமிழகம் வருவது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்களை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழகத்தின் கருத்து கவனத்தில் கொள்ளப்படும்!-எஸ்.எம்.கிருஷ்ணா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com