Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டீனிஸ் நேற்று மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கெதிரான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, முன்வைத்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் அமெரிக்கத் தூதுவருடன் வேறு அதிகாரிகள் எவரும் பங்கு கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ், வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம, வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலர் சேனுகா செனிவிரத்ன மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கெதிரான அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பாகவே இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வழக்கமான சந்திப்புகள் ஒழுங்கு செய்யப்படாத இடத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளதாகவும், தகவல்கள் வெளியே கசியாமல் தவிர்க்கும் வகையில், கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to அமெரிக்கத் தூதுவர் பற்றீசியாவுடன் மகிந்த இரகசிய சந்திப்பு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com