Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சட்டப்பேரவையில் இன்று அதிமுக உறுப்பினர்களுக்கும், தேமுதிக உறுப்பினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறுகையில், தேமுதிக தலைவர் புயல் நிவாரணமாக 6 பேருக்கு வேட்டி சேலை கொடுத்தார். 6 பேருக்கு அடிஉதை கொடுத்தார் என்று கூறினார். இதற்கு தேமுதிக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுபற்றிய விவரம்:

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது தேமுதிக உறுப்பினர் மோகன்ராஜ் பேசுகையில், தானே புயல் நிவாரண நிதி போதுமான அளவு கொடுக்கப்பட வில்லை, மின்வெட்டால் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, சிறு குறு தொழிற்சாலைகளுக்கு ஜெனரேட்டர் வைக்க ரூ.5 லட்சம் மானியம் அளிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறேன். மின்வெட்டு குறித்து நேற்று நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது. மின் உற்பத்திக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம் என்பதை தெளிவாக கூறினேன். ஜூன் மாதம் முதல் மின்வெட்டு குறையும் என்பதையும் எடுத்துக் கூறினேன். இவ்வளவு கூறிய பிறகும் குறை கூறினால் என்ன சொல்வது, தூங்குபவர்களை எழுப்ப முடியும், தூங்குவது போல் நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும் என்றார்.

அமைச்சர் சி.வி. சண்முகம் கூறுகையில் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த அரசும் செய்ய முடியாத அளவுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்தார். 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கிறார். அதன் பிறகும் குறை சொல்வது சரி அல்ல என்றார்.

அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறுகையில் அவரது தலைவர் 6 பேருக்கு வேட்டி சேலை கொடுத்தார். 6 பேருக்கு அடிஉதை விழுந்தது. தானே புயல் நிவாரணம் பற்றி குறை சொல்ல இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

0 Responses to வேஷ்டி சட்டை கொடுத்துவிட்டு வேஷ்டி கிழிய அடித்தவர் விஜயகாந்த்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com