Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வாங்கப்பட்டதாக தினகரன் ஆதரவாளரான தங்கதமிழ்செல்வன் விமர்சனம் செய்திருந்தார். இதனையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூரிய பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் முறையீட்டார்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியதாவது:

“தீர்ப்பு பற்றி கருத்து கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. நாங்கள் மனசாட்சியுடனும் கடமையை உணர்ந்து செயல்படுவதால் விமர்சனங்கள் குறித்து கவலையில்லை. நீதிபதிகளாகிய நாங்கள் பயப்பட வேண்டியதும், பதில் சொல்ல வேண்டியதும் ஆண்டவனுக்கு மட்டும் தான். நீதிபதிகள் பற்றி தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். வழக்கின் தன்மையை பொறுத்துதான் மனசாட்சியுடனும் முழு மனதுடன் விசாரித்து தீர்ப்பு வழங்குகிறோம். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும். நீதிமன்ற அவமதிப்பு புகாரை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணை நடத்தப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு; உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com