Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட எந்தப் பிரேரணையும் தோற்றதாக சரித்திரமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை குறித்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்து அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது. அமெரிக்காவின் பிரேரணை இலங்கைக்கு எதிரானதல்ல. அது இலங்கைக்கு நன்மை தரக்கூடியதொன்றாகவே அமையும்.

அமெரிக்காவினல் கொண்டுவரப்பட்ட பிரேரணையொன்று தோல்வியடைந்ததாக சரித்திரமே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரேரணையானது இலங்கைக்கு எதிரானதொன்றல்ல!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு

அமெரிக்காவினால் ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையானது இலங்கைக்கு எதிரானதொன்றல்ல. இலங்கை அரசாங்கத்தில் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அல்படுத்தக் கோரும் பிரேரணையேயாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்தரன் தெரிவித்தார்.

ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் பிரேரணை குறித்து கருத்து கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை அமுல்படுத்துவது தொடர்பாகவே அமெரிக்காவினால் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணையல்ல. இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு பொறுப்புக் கூறும் விடயத்தில் சரியான தீர்மானங்களை எடுக்கவில்லை என்று இந்தப் பிரேரணையில் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. இதனைவிட ஏனைய அனைத்து விடயங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றது.

பரிந்துரைகளை அமுல்படுத்துவதா இல்லையா என்பது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த விடயமாகும். இதற்கென கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் இதிலிருந்து தப்பிப்பதற்கான காரணங்களை இலங்கை அரசு இன்றிலிருந்தே தேடத்தொடங்கும். எனவே இதன் மூலம் எதுவும் நடைபெறும் என்று எண்ணுவதற்கில்லை.

0 Responses to அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட எந்தப் பிரேரணையும் தோற்றதாக சரித்திரம் இல்லை! தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com