Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை இரசியல் பிரமுகர்களின் தமிழக பயணம் குறித்து முன்கூட்டியே தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

இலங்கை பிரமுகர்களின் திடீர் பயணத்தால் தமிழகத்தில் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இலங்கை பிரமுகர்களின் பயணம் தொடர்பாக தமிழக அரசுடன் அவசியம் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்து கடிதம் அனுப்பியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை பிரமுகர்களின் தமிழகம் பயணம் தொடர்பாக தமிழக அரசுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துமாறு குறிப்பிட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஆன்மீக மற்றும் சுற்றுலா ரீதியாக தமிழகம் வரும்போது தமிழ் அமைப்புகள் போராட்டங்களை நடத்துகின்றன. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகக் கூறி மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார்.

0 Responses to இலங்கை அரசியல் பிரமுகர்கள் வருகை பற்றி முன்கூட்டியே அறியத்தரப்படும்!: ஜெயாவுக்கு மன்மோகன் உறுதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com