Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த சில 6ம் திகதி நடைபெற்ற ரஸ்ய அதிபர் தேர்தலையும், அதில் நடைபெற்ற மோசடிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்தத் தேர்தலில் சில இடங்களில் 110 வீத வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது. சகல விதத்திலும் சர்வதேச நியமங்களை கடைப்பிடிக்காது நடாத்தப்பட்ட மோசடித் தேர்தல் என்று கண்டிக்கும் பிரேரணை ஐரோப்பிய பாராளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் தேர்தல் மதிப்பீட்டு கண்காணிப்பு அமைப்பான ஓ.எஸ்.சீ.ஈ வெளியிட்டுள்ள அறிக்கையில் 3500 தேர்தல் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தல் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. ரஸ்யாவில் நடைபெறவுள்ள எதிர்கால ஜனநாயகத் தேர்தல்களிலும் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான மோசடிகள் தொடராமல் இருக்க இத்தகைய பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அங்கு நடைபெற்ற தேர்தலைக் கண்டித்து, சுதந்திரமான தேர்தல் வேண்டுமெனக் கோரி வீதியில் இறங்கிப் போராடிய ஆயிரக்கணக்கான ஆர்பாட்டக்காரரை ஐரோப்பிய ஒன்றியம் ரோசாச் செண்டுகளை வீசி பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த ஆர்பாட்டங்களை அடக்குவதில் அதிக வீறாப்பு காட்டாமல் புற்றின் இருக்கிறார். அடுத்தபடியாக ரஸ்ய பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பழைய கைப்பொம்மை அதிபர் டிமிற்ஜி மிடேவை மறுபடியும் பிரதமராக்க வேண்டியிருப்பதால் புற்றின் அடக்கி வாசிக்கிறார். இப்போது அவர் வீறு கொண்டு எழுந்தால் பாராளுமன்ற தேர்தலில் மண் கவ்வ நேரிடும் என்பது தெரிந்ததே.

0 Responses to ரஸ்ய அதிபர் தேர்தல் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் விமர்சனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com