Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 19 வது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் நோக்கில் இலங்கையிலிருந்து அமைச்சர்கள் அடங்கிய குழு, மீண்டும் இன்று ஜெனீவா பயணமாகவுள்ளதாக தெரியவருகின்றது.

அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட குழுவினரே இவ்வாறு இன்றைய தினம் ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே ஜெனீவா சென்றிருந்த குறித்த அமைச்சர்களைக் கொண்ட குழுவினர் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுவிட்டு கடந்த வாரம் நாடு திரும்பியிருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் இறுதிக்கட்ட அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக சில தினங்களில் அமைச்சர்கள் குழுவினர் ஜெனீவா செல்ல ஏற்பாடாகியிருந்தாலும் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணையை திடீரென பேரவையில் சமர்ப்பித்தமையின் காரணமாக முன்கூட்டியே செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரின் அமர்வுகள் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 20 ஆம் திகதியளவில் இடம்பெறலாம் என்று தெரியவருகின்றது.

எனவே அதற்கு தயாராகும் வகையிலேயே இலங்கை தூதுக்குழுவின் அமைச்சர்கள் குழுவினர் மீண்டும் இன்று ஜெனிவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இலங்கை தூதுக்குழுவில் இடம்பெறுகின்ற சில முக்கிய அதிகாரிகள் ஏற்கனவே ஜெனிவா சென்றுள்ளதுடன் பல்வேறு இராஜதந்திர முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய தினம் ஜெனீவா செல்லவுள்ள அமைச்சர்கள் குழுவினர் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை ஜெனீவாவில் தங்கியிருந்து இலங்கை நிலைமை குறித்து உறுப்பு நாடுகளுக்கு விளக்கமளிப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to இலங்கையின் அமைச்சர்கள் குழு இன்று ஜெனீவா நோக்கி பயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com