Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கை அரசானது தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து, அதனை யுத்தத்தில் வெற்றி கொண்டமைக்காக நாடெங்கும் உள்ள விகாரைகளில் விசேட பூஜைகள் மேற்கொள்ளவுள்ளதாம். இதனடிப்படியில் விசேடமாக, கண்டி மாவட்டத்தில் உள்ள பல விகாரைகளில் பல்வேறு சமய வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை மறைமுகமாக எதிர்க்கவே இது நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்த பிரசாரச் சுவரொட்டிகள் கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் சுவரொட்டிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியும் அமெரிக்கக் கொடியும் இணைக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தூதரகத்தை மேலும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக இது அமையலாம் எனக் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to கண்டியில் புலிக்கொடிக்கும் அமெரிக்கக் கொடிக்கும் முடிச்சு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com