Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கதிரவனின் துணையின்றி இவ்வுலகம்சுற்றாது அதுபோல் உழைப்பாளிகள் இல்லாமல் ஓர்தேசம் வளர்சியடையாது. தேசத்தின் உயர்வுக்காக வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளருக்கு தொழிளாலர் தினத்தில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு தனது புரட்சிகரமான வாழ்த்துகளை தெரிவிக்கின்றது.

இலங்கை பேரினவாதத்தின் இனவழிப்பால் தமிழீழத்தை பிரிந்து தமிழீழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றபோதும் தாம்புலம்பெயர்ந்துவாழும் நாட்டுமக்களுடன் இணைந்து உழைத்து தாம் புலம் பெயர்ந்துவாழும் நாட்டின் வளர்சிக்கு துணைபுரிந்து, தமிழீழத் தமிழர்களின் உழைக்கும் திறனை வெளிப்படுத்தி எமது தாய் நாட்டுக்கும் தமிழீழத் தமிழர்களுக்கும் பெருமைசேர்க்கின்றனர் என்பதை யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு பெருமையுடன் சுட்டிக்காட்டவிரும்புகின்றது.

தமிழீழத் தமிழர் புலம்பெயர்ந்துவாழும் நாடுகளின் அரசுகள் தமிழர்கள் ஒழுக்கமானவர்கள், பண்பானவர்கள், சுறுசுறுப்பானவர்கள், சிறந்தஉழைப்பாளிகள் என கூறி தமிழீழத் தமிழர்களை வாழ்த்துகின்றன.

சிங்கள பேரினவாதத்தின் திட்டமிட்ட இனவழிப்பால் தமிழீழத்தில் வாழும் எமது மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு தொழில்வாய்ப்புகள் சீரழிந்து தமிழரின் பொருளாதாரம் சிதைவடைகின்றது.

ஓர் இனத்தின் பொருளாதாரம் அழிந்தால் அவ்வினத்தின் எதிர்காலாம் பாதிக்கப்படும் என சர்வதேசத்திற்கு இவ்வறிக்கையூடாக நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இனவழிப்பு செய்தநாட்டுடன் என்றுமே சேர்ந்து வாழமுடியாது என்பதற்கு அமைய சர்வதேச நாடுகள் தமிழீழ தனியரசை அங்கீகரித்து தமிழர்கள் தமது தாய்நாட்டில் கௌரவத்துடன் உழைத்து உயர்ந்து வாழ்வதற்கு உதவமுன்வரவேண்டுமென தமிழ் இளையோர் அமைப்புகேட்டுக்கொள்கின்றது.

மேலும் தொழிளாலர் தினத்தில் வேற்றினமக்களுடன் இணைந்து தமிழீழமக்களும் தொழிளாலர் தினத்தில் கலந்துகொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்த முன்வரவேண்டும்.

தமிழீழம் மலரும் வரை தமிழ் இளையோர் அமைப்பு தமிழீழ விடிவிற்காக தொடர்ந்து உழைக்குமென தொழிளாலர் தினத்தில் தமிழ்மக்களுக்கு கூறவிரும்புகின்றது.

வெல்லும்வரைஉழைப்போம்! தமிழீழத்தில்உயர்ந்துவாழ்வோம்!

''தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்''

நன்றி
தமிழ்இளையோர்அமைப்பு - யேர்மனி

0 Responses to உழைக்கும்கரங்கள்வாழ்க! தமிழ்இளையோர்அமைப்பு - யேர்மனி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com