Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒஸாமா பின்லேடனின் மூன்று மனைவிகளில் ஒருவரே பொறாமை காரணமாக பின்லேடனை காட்டிக் கொடுத்தார் என்று த இன்டிப்பென்டன்ட் எழுதியுள்ளது. பின்லேடனின் மூத்த மனைவியான கரியா சபாவே சி.ஐ.ஏக்கு தகவலை வழங்கியுள்ளார். பின்லேடனின் இளம் மனைவிகளில் அவர் காட்டிய அன்பை வயது போன மனைவியிடம் காட்டாத காரணத்தால் பரிதாப மரணமடைய நேர்ந்துள்ளது. பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற உளவுப்பிரிவு அதிகாரி சவுகார் சாடிர் என்பவர் கடந்த எட்டு மாதங்களாக நடாத்திய ஆய்வின் பின்னர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

வெறிகொண்ட அமெரிக்கப் படைவீரர் ஒருவர் ஆப்கானில் உள்ள வீடுகளில் புகுந்து 16 பேரை சுட்டுக் கொன்றார். இந்த அனர்த்தத்தில் ஒன்பது சிறு பிள்ளைகளும் கொல்லப்பட்டுள்ளார்கள். கொலைகளை புரிந்த படையினன் முகாம் திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த சில நாட்களாக நடைபெறும் குர்ரான் எரிப்பு ஆர்பாட்டங்கள், ஆப்கான் படையினர் அமெரிக்கப்படைகள் மீது நடாத்தும் தாக்குதல் போன்ற பல காரணிகள் இவருடைய குழப்பத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வியட்நாமில் நிலை தடுமாறியதைப்போல முடிவற்ற ஆப்கான் போரில் அமெரிக்கப் படைகள் தடுமாற ஆரம்பித்துள்ளமை தெரிகிறது.

சிரியா சென்று பேச்சுக்களை நடாத்திய முன்னாள் ஐ.நா செயலர் கொபி அனான் சிரிய அதிபர் ஆஸாட்டுடன் இரண்டாவது கட்ட பேச்சுக்களை இன்று நடாத்தினார். அதன் பின்னர் இன்னமும் நம்பிக்கை இழக்கவில்லை என்ற கருத்தை மட்டுமே அவரால் முன் வைக்க முடிந்துள்ளது. உடனடியாக இரத்தக் களரியை நிறுத்துவது சாத்தியமில்லை என்று அவர் கூறினார். இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உறுதியான அடிப்படை யோசனைகளை தான் முன் வைத்திருப்பதாக கூறினார். பயங்கரவாதக் குழுக்கள் நாடு முழுவதும் புற்றுநோய் போல பரவிவிட்டதால் தாக்குதல்களை நிறுத்த இயலாது என்று ஆஸாட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தான் மீண்டும் சிரியா செல்ல இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அனான் பயணம் வழமைபோல பயனற்ற ஒன்றாகவே இருந்துள்ளது.

பிரான்சிய அதிபர் ஸார்கோஸியின் 15 வயது மகன் ஒருவர் நண்பர்களுடன் போகும்போது பெண் போலீசார் ஒருவர் மீது தக்காளியால் வீசியுள்ளார். ஸார்கோஸியின மூன்று மனைவிகளுக்கு நான்கு பிள்ளைகள் உண்டு. இவர்களில் ஒழுங்காக வளர்க்கப்படாத லூய்ஸ் ஸார்கோஸி செய்த வேலை ஸார்கோஸியை பாதித்துள்ளது. வரும் தேர்தலில் தோல்வியடையும் நிலையில் இருக்கும் பிரான்சிய அதிபருக்கு சென்ற வாரம் சில ஆர்பாட்டக்காரர் முட்டையால் வீசியிருந்தனர். இப்போது அவருடைய மகன் தக்காளி வீசியுள்ளார். தேர்தலில் தோற்றால் மறுபடியும் போட்டியிடுவதில்லை என்று ஸார்கோஸி கூறியுள்ளார்.

நேற்று வெளியான ஆய்வுகள் டேனிஸ் பிரதமர் கெல தொனிங் சிமித்தின் ஆறு மாதகால ஆட்சியை 52 வீதமானவர்கள் அதிருப்தியுடன் நோக்குவதாக தெரிவித்திருந்தது. இன்று வெளியாகியுள்ள வொக்ஸ்மீற்றர் ஆய்வு சோசல் டெமக்கிரட்டி கட்சி வரலாறு காணாத அதல பாதாளத்தில் விழுந்துள்ளதாக தெரிவிக்கிறது. வெறும் 18.5 வீதமானவர்களே இப்போது சோசல் டெமக்கிரட்டியை ஆதரிக்க தயாராக உள்ளார்கள் என்றும் அது தெரிவிக்கிறது. இப்போது தேர்தல் நடந்தால் அது 11 அங்கத்தவரை பறிகொடுத்து வெறுமனே 33 ஆசனங்களையே பெறும். அதேபோல அரசின் கூட்டுக்கட்சியான றடிகல வென்ஸ்ர ஓர் ஆசனத்தை இழக்குமளவுக்கு பின்தங்கியுள்ளது, அடுத்த கட்சியான எஸ்.எப் நான்கு அங்கத்தவரை இழக்குமளவுக்கு பின்னடைவு கண்டுள்ளது. ஆனால் என்கில்ஸ் லிஸ்ற் கட்சி 16 அங்கத்தவரை பெறுமளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இப்போது தேர்தல் நடைபெற்றால் வென்ஸ்ர தலைமையிலான எதிரணி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கிறது.

இன்றைய பொருளாதார நெருக்கடியை எப்படி வெற்றிகரமாக சமாளிப்பது என்று தெரியாமல் இக்கட்சிகள் தடுமாறுகின்றன. இதை மக்கள் சரியாக நாடி பிடித்துப்பார்த்துள்ளார்கள் என்பதையே இரண்டு ஆய்வுகளும் காட்டுகின்றன. ஆனால் வென்ஸ்ர அணியும் இதுபோல திறமையற்ற அணி என்று கடந்த தேர்தலில் மக்கள் விரட்டியடித்திருந்தமை கவனிக்கத்தக்கது.

மேலும் கருத்துக் கணிப்பில் நான்கு அங்கத்தவர்களை இழக்குமளவுக்கு எஸ்.எப் பின்தங்கியது அரச மட்டத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வில்லி சுவிண்டேல் மீதும் அவருடைய கட்சியினருக்கு கடும் அதிருப்தி நிலவுகிறது. முன்னைய வெளிநாட்டு அமைச்சர் லீனா எஸ்பர்சன் கொன்ஸ்ச வேட்டிவ் கட்சித் தலைவரகவும், வெளிநாட்டு அமைச்சராகவும் இருந்து இரண்டையும் நாசமாக்கியது போல, இவரும் நாசமாக்குகிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பல நாடுகளுக்கும் சென்று விமானத்திலேயே அதிக காலம் கடத்தும் வெளிநாட்டு அமைச்சர் கட்சித் தலைவராகவும் இருக்க முடியாது என்று குறைகூறி வருகிறார்கள்.

கடந்த வாரம் சனிக்கிழமை 22 வயதுடைய ஆனர்ஸ் மார்க் என்ற மெக்கானிக் காட்டுப்பகுதியில் வைத்து இனந்தெரியாதவர்களால் கொல்லப்பட்டது தெரிந்ததே. இந்தக் கொலை வழக்கில் நேற்று சனி மாலை 27 வயதுடைய இன்னொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணைகளின் போது இவர் குற்றத்தை அடியோடு மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் இன்னொரு 33 வயது நபர் ஏற்கெனவே கைதாகி அவருடைய புகைப்படங்களும் வெளியாகியிருந்தது. இப்போது இன்னொருவர் சிக்குப்பட்டுள்ளார், விசாரணைகள் தொடர்கின்றன.

0 Responses to ஓஸாமாவின் பொறாமை பிடித்த கிழட்டு மனைவியே காட்டிக் கொடுத்தார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com