Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பராக் ஒபாமாவின் கருத்தை ஈரான் வரவேற்றது

பதிந்தவர்: ஈழப்பிரியா 09 March 2012

நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்த கருத்தை ஈரானிய அதி உயர் மதத்தலைவர் அயதொல்லா அலி காமெய்னி வரவேற்றுள்ளார். ஈரானுடன் போர் செய்ய வேண்டிய அவசியம் இன்னும் வரவில்லை. அந்த நாட்டில் அணு குண்டு இருப்பதை நான் இன்னமும் அறியவில்லை. பேச்சுக்களை நடாத்தி பிரச்சனைக்கு தீர்வு காண சன்னல் திறந்தே இருக்கிறது என்ற பராக் ஒபாமாவின் கருத்தையே ஈரானிய மதத்தலைவர் வரவேற்றுள்ளார். இரு நாடுகளுக்குமிடையே ஆரோக்கியமான அணுகு முறையை ஏற்படுத்த இது உதவும் என்றும் ஈரானிய இர்னா தொலைக்காட்சிக்கு இன்று வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அணு குண்டு தயாரித்தால் அதை இரண்டு விதமாக அணுக முடியும். ஒன்று ஈரானுக்கு எதிரான நேரடிப் போரினால் அதனுடைய அணு வளத்தை அழித்தல் இரண்டு : ஈரானைவிட அதி நவீன ஆயுதங்களை உருவாக்கி அதனுடைய அணு குண்டை பலமிழக்க செய்வது. இதில் இரண்டாவது வழியே சிறந்தது என்ற முடிவை பராக் ஒபாமா இஸ்ரேலிடமும் அறிவித்துள்ளார். உலகம் சந்திக்கவுள்ள அணு ஆயுத எதிர்ப்புப் போரில் இது புதியதோர் வியூகமாகும்.

இது இவ்விதம் இருக்க சிரியாவில் ஆஸாட் சீனாவின் புத்திமதியையும் கேட்க மறுத்துள்ளது போல நிகழ்வுகள் நடந்துள்ளன. ஆஸாட் படைகள் கோம்ஸ் நகரத்தில் நேற்று 44 பேரை பரிதாபமாக கொன்றொழித்தன. இவர்கள் அனைவரும் வெறும் ஐந்தே ஐந்து குடும்பத்தை சேர்ந்த உறுப்பினராகும். ஒரு குடும்பத்தில் 20 பேரும் இன்னொரு குடும்பத்தில் 16 பேரும் கொல்லப்பட்ட பேரவலம் அரங்கேறியுள்ளது. இந்த நிகழ்வை அடுத்து ஐ.நாவின் சிறுவர் கல்விப் பிரிவு நேற்று நடாத்திய வாக்கெடுப்பின் பின்னர் சிரியா என்ற நாட்டையே யுனெஸ்கோவில் இருந்து தூக்கி வீசியது. உலகத்தில் முதலாவது தடவையாக ஒரு நாடு யுனெஸ்கோவில் இருந்து வீசப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் பிரிட்டன் முக்கிய பாத்திரம் வகித்துள்ளது.

மறுபுறம் ஆபிரிக்காவில் உள்ள பல நாடுகளில் மொத்தம் 13.000.000 மக்கள் பட்டினிச் சாவின் விளிம்பில் நிற்கிறார்கள் என்று ஒக்ஸ் பாம் அறிவித்துள்ளது. சாட், நைஜர், மாலி, வடக்கு சினேகல், புர்கினா பாஸோ, முரரேனியா போன்ற நாடுகள் பெரும் பட்டினியில் மாட்டியுள்ளன. உலக சமுதாயம் உடனடியாக உதாவாவிட்டால் பேரழிவு நடைபெறுமென அவலக்குரல் எழுப்பியுள்ளது.

நேற்று முன்தினம் முதல் உலகளாவிய ரீதியில் பலரது கவனத்தைத் தொட்டுள்ள கொனி 2012 என்ற குறுந்திரைப்படம் குறித்து மெலம் போல்க சம்வியக்க தாபனத்தின் தலைவர் மிக்கேல் ஜென்சன் மகிழ்வு தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படம் பிள்ளைகள் படையணியின் பேரவலம் குறித்த சிறந்த தயாரிப்பாகும். பலருடைய கண்களை இப்படம் திறந்து பார்க்க வைத்துள்ளது. ஆனால் பிள்ளைகளை படையணியில் சேர்த்து அழிக்கும் நாசச் செயலுக்கு யோசப் கொனி என்ற ஒரு தனி நபரை மட்டும் சம்மந்தப்படுத்துவது போல படத்தின் தயாரிப்பு உள்ளது. இதில் யோசப் கொனி ஒருவர் மட்டுமல்ல பலர் பின்னால் நிற்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

வரும் மே 6ம் திகதி பிரான்சிய அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய அதிபர் ஸார்கோஸி தாம் தேர்தலில் தோல்வியடைந்தால் அரசியல் வாழ்வில் இருந்து ஒதுங்கிவிடுவேன் என்று கூறியுள்ளார். தேர்தலில் வெற்றி தோல்வி ஆகிய இரு வழிகள் உள்ளன. இதில் தோல்விக்குப் பிறகு என்ன என்ற கேள்வியே மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டும் கேள்வியாகும். இதற்கு பதிலளித்த ஸார்கோஸி அரசியலில் இருந்து விலகுவதே வழி என்று கூறியதால் ஆதரவு சிறிது கூடியுள்ளது. ஆனால் கருத்துக் கணிப்போ சோசலிச வேட்பாளர் பிரான்சியோ கொலன்ட் இவரை தோற்கடிப்பார் என்று கூறுகிறது.

நேற்று நடைபெற்ற உலகப் பெண்கள் தினத்தையொட்டி 1993 – 1998 வரை வடதுருவ நாடுகளில் உள்ள 850 பெண் படைப்பாளிகளின் ஆக்கங்கள் இணையத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. டேனிஸ் – நோஸ்க் – ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் இந்த ஆக்கங்களை படிக்க முடியும். நோடிஸ்க் கிவின லிற்றரேச்சுவ. டி.கே என்ற முகவரியில் இதைக் காணமுடியும். கிவின்போ வெப் மகசீன் ஆசிரியை எலிசபெத் மூல ஜென்சன் இந்த வேலைத்திட்டத்தில் முன்னணி வகிக்கிறார்.

கிரேக்கத்தின் வரவு செலவுத்திட்டம் 100 பில்லியன் யுரோ பற்றாக்குறையுடன் கடன் நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 85.3 வீதமான கடன் நிறுவனங்களினால் இந்த மீதம் பிடித்தல் ஏற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிரேக்கம் ஐரோப்பாவின் கோரிக்கையில் 75 வீதத்தை எட்டித் தொட்டுள்ளது.

டென்மார்க் சந்தோம் அகதி முகாமில் துப்பாக்கி வைத்திருந்த டெனி அப்டெலா என்ற நபருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் ஒல்போ நகர் வன்முறைக்குழுக்கள், கிரிமினல் பின்னணிகளுடனும் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

அலைகள்

0 Responses to பராக் ஒபாமாவின் கருத்தை ஈரான் வரவேற்றது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com