இலங்கை அரசினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வின் அறிக்கையில் குறித்துரைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலர் பான்கீமூன் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பான்கீ மூன் வரவேற்பதாக அவரின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நல்லாட்சி தொடர்பான பரிந்து ரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் எனப் பான்கீ மூன் கருதுகின்றார் என்றும் அவர் கூறினார்.
பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என ஐ.நா. செயலர் நம்புவதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அமைச்சர்கள் வெளியிட்டுவரும் கருத்துக்கள் குறித்தும் பான்கீ மூன் கவனம் செலுத்துவதாக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். பரிந்துரைகள் எவ்வளவு விரைவாக நடைமுறைப்படுத்துப்படுமோ அந்தளவுக்கு இலங்கையில் நிலையான அமைதி ஏற்படுவதற்கான சூழல் உருவாகும் எனவும் அவர் கூறினார்.
0 Responses to ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ஐ.நா.செயலர்