ஒழுங்கு, ஒழுக்கத்தில் சிறந்த யாழ். மக்களை சீரழிக்க சிங்கள இனவாதம் போட்ட திட்டங்களில் ஒன்று அந்த சமுதாயத்தை சீரழிப்பதாகும். இப்போது வெளியாகியுள்ள அறிக்கை யாழ். குடாநாட்டில் மதுபான விற்பனையை அளவுக்கு அதிகமாகக் காட்டுகிறது. இதற்கு மக்களை குறைகூற முடியாது, சமுதாயத்தை திட்டமிட்டு சீரழிக்கும் அரச பயங்கரவாதத்தின் ஓரம்சமே இதுவாகும். சிறீலங்கா இராணுவம் சூரியக்கதிரில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னரே இந்த சமுதாய அவலம் அரங்கேறியுள்ளது. ஆகவே சிறீலங்கா, ஐ.தே.க போன்ற இனவாத கட்சிகளின் ஆட்சியே இதற்கு பொறுப்பு. யாழ். மக்களை அவமானப்படுத்தும் விதமாக வெளிநாடுகளிலோ உள்நாடுட்டிலோ செய்திகள் எழுதுவது தப்பு என்பதை அனைவரும் உணர வேண்டும். கீழே தரப்படும் செய்தி சிறீலங்கா இராணுவமும், ஆயுதக்குழுக்களும், அடிவருடிகளும் யாழ். மண்ணில் இருந்து விலக வேண்டும் என்பதைக் காட்டுகின்றது. :
யாழ். குடாநாட்டில் :
மாதாந்தம் சராசரியாக 2 லட்சத்து 82 ஆயிரம் லீற்றர் சாராயம் விற்பனையாகி றது. 4 லட்சத்து 9 ஆயிரம் லீற்றர் ஏனையவகை மதுபானம் விற்பனையாகிறது. இதனுள் பியர், விஸ்கி, பிரன்டி, ஜின், ரம் எனப் பலவகைகள் உள்ளடங்குகின்றன.
யாழ். மதுவரி நிலையம் தவிர்ந்த ஏனைய மதுவரி நிலையங்களில் 30 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 35 ஆயிரம் லீற்றர் வரையான சாராயம் விற்பனை யாகின்றன. 55 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 60 ஆயிரம் லீற்றர் வரையான ஏனைய மதுபான வகை கள் விற்பனையாகின்றன. எனத் தெரிவித்தார்.
யாழ்.மதுவரி நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜனவரியில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 904 லீற்றர் மதுபான வகையும், பெப்ர வரியில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 450 லீற்றர் மதுபான வகைகளும் விற்பனையாகியுள்ளன என்று பிரதம மதுவரிப் பரிசோதகர் என்.கிருபாகரன் தெரிவித்தார்.
சாராயம் ஜனவரியில் ஒரு லட்சத்து 77 ஆயிரம் லீற்றரும் பெப்ரவரியில் 82 ஆயிரத்து 775 லீற்றர் விற்பனையாகியுள்ளது. கள்ளு ஜனவரியில் 38 ஆயிரத்து 900 லீற்றரும் பெப்ரவரியில் 70 ஆயிரத்து 900 லீற்றரும் விற்பனையாகியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்துக்கு வரும் காலங்களில் மதுபான விற்பனை அதிகரிக்கின்றன. சுமார் 10 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 15 ஆயிரம் லீற்றர் வரையில் இத்தகைய காலங்களில் அதிகரித்து விற்பனையாகின்றது.
யாழ். மதுவரி நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தென்னை பனை, மரங்கள் அதிகளவில் காணப்படுவதனால் அத்தகைய இடங்களில் கள்ளு விற்பனை அதிகளவில் இடம்பெறுகிறது. சாராயம் மற்றும் ஏனைய மதுபான வகைகளின் விற்பனையை கள்ளின் விற்பனையும் தீர்மானிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு ஆண் ஒருவர் 3 யுனிற் அற்ககோலுக்கு அதிகமாகவும் பெண் ஒருவர் 2 யுனிற் அற்க கோலுக்கு அதிகமாகவும் அருந்துவார்களானால் அவர்களுக்கு ஈரல் பாதிப்பு உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
சாராயம் மற்றும் ஏனைய மது பானவகைகள் வேறுபட்ட அளவில் அற்ககோல் அளவைக் கொண்டுள்ளன. அதனை அவதானிக்காது அளவுக்கதிகமாக மது அருந்தும் போது அருந்துபவர்களுக்குத் தெரியாமலேயே நோய் அவர்களைப் பற்றிக் கொள்கிறது.
தற்காலத்தில் வயது வந்தவர்களுக்கு நிகராக 21 வயதுக்குட்பட்டவர்களும் தாராளமாக மது பாவிக்கிறார்கள். கடைகளில் நின்று மது அருந்தாது ரின்கள், போத்தல்களாக வேண்டிச் சென்று வீதிச் சந்திகளில் வைத்து அருந்துகிறார்கள். இதனைச் சமூகத்தவர்கள் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்று அந்த வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Responses to யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய சந்திரிகா ஆட்சியின் நோக்கம் நிறைவேறியது